10 Apr 2013


100% பலன் தருவோம்!...

(மத்தேயு 13:3-8 வசனங்கள் வரை..
 விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்...
அவன் விதைக்கையில், சில விதை வழியருகேவிழுந்தது...
 சில விதை அதிகமண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது..
சில விதை முள்ளுள்ள இடங்களில்விழுந்தது..
சில விதையோ நல்ல நிலத்தில்விழுந்து..
 சிலது நூறாகவும், சிலதுஅறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன்தந்தது.)

விதை – தேவனுடைய வசனம்.
கர்த்தர் நல்லவர். எனவேதான் தமது வார்த்தை எனும் விதையை வழியருகே; கற்பாறை இடம்; முள்ளுள்ள இடம்; நல்ல நிலம் ஆகிய இடங்களில் பாரபட்சமின்றி போடுகிறார்.
தேவனுடைய சித்தம் நாம் அனைவருமே நூறு மடங்கு பலன் கொடுக்கவேண்டும் என்பதுதான்.
நாமோ நமது இருதயத்தை உபயோகமற்றதாய்; கடினமான; இச்சைகள்; கவலைகள் ஆகியவற்றால் நிறைத்து பயனற்றவர்களாய், பலன் கொடுக்க முடியாதவர்களாய் இருக்கிறோம்!
ஆவிக்குரிய வாழ்வில் பாஸ் மார்க் என்பது 30 மற்றும் 60 அல்ல.
பரலோகம் செல்ல 100 க்கு 100 எடுக்க வேண்டும்.
அனைத்து கட்டளைகளையும் சிறுவயது முதல் கடைபிடித்தாலும், ஒரே ஒரு குறையோடு ஆண்டவரை விட்டுப்போன அந்த ஐசுவரியவான் – வாலிபனை நினைவு கூறுங்கள்…
நம் இருதயங்களை கர்த்தரின் கரத்தில் ஒப்புக்கொடுத்து, பாவமன்னிப்பை பெற்று; நல்ல நிலங்களாக மாற்றி 100 மடங்கு கர்த்தருக்கு பலன் கொடுக்கிறவர்களாய் நாம் மாற கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக!
இயேசு நல்லவர்;
இன்றும்.. என்றும்..
கர்த்தரின் பணியில்
-கிருபை ஊழியங்கள் (GRACE MINISTRIES)
Mail us to: graceministriestpr@gmail.com


0 comments:

Post a Comment