14 Apr 2013


15th April 2013
>>>மேலே பாருங்க!<<<
கர்த்தராகிய இயேசுவின் பெயரால் வாழ்த்துக்கள்!
1)   நம்மில் அனேகர் கீழே பார்க்கிறவர்கள் : அதாவது பூமிக்குரியவற்றின் மேலேயே நோக்கம்; சிந்தை எல்லாம்! பொதுவாக நாம் எதை மிக அதிகமாக தேடுகிறோமோ அதை அடைவதற்கு பதிலாக அதன் மூலமாய் வரும் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடுகிறது. அப்புறமென்ன? ஒரே போராட்டம்தான் வாழ்க்கை!
2)   நம்மில் அனேகர் சமமாய் அல்லது நேராய் பார்க்கிறவர்கள் : அதாவது நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதரின் முகத்தையே (எதிர் நோக்குவது) பார்த்துக்கொண்டிருப்பது. இது ஒன்றும் தவறல்ல. ஆனால் அதையே எப்போதும் செய்துகொண்டிருப்பது தவறே!
நமது அன்பு ஆண்டவர் நமக்கு எப்போதுமே நல்வழி காட்டுபவர் ஆகையால், இன்று அவர் காட்டும் நல்வழி எது தெரியுமா?
மேலே பாருங்கப்பா! என்பதுதான்!
(கொலொ 3:1-2) நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.  பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
-         என்று வேதத்தின் வழியே அழகாய் கற்றுகொடுக்கிறார். மேலானவைகள் என்பது கர்த்தரின் பிரசன்னமே ஆகும். கர்த்தருக்குப் பிரியமான காரியங்களே ஆகும்.

பின்வரும் காரியங்களை தியானியுங்கள்…

1.   அற்புதங்களைப் பெற கிறிஸ்துவைப் போல மேலே பாருங்கள்:
மாற்கு 6:41, 42  அவர் அந்த ஐந்து அப்பங்களையும்அந்த இரண்டு மீன்களையும் எடுத்துவானத்தை அண்ணாந்துபார்த்துஆசீர்வதித்துஅப்பங்களைப்பிட்டுஅவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.  எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.

2.      சுகம் பெற கிறிஸ்துவைப் போல மேலே பாருங்கள்:
மாற்கு 7:34,35  வானத்தை அண்ணாந்துபார்த்துபெருமூச்சுவிட்டுஎப்பத்தா என்றார்அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
 உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டுஅவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்துஅவன் செவ்வையாய்ப் பேசினான்.
3.   பாடுகளின் நடுவில் ஸ்தேவானைப் போல மேலே பாருங்கள்:
அப்போஸ் 7:55, 56  அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய்வானத்தை அண்ணாந்துபார்த்துதேவனுடைய மகிமையையும்தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும்மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
4.      கர்த்தரை மகிமைப்படுத்த கிறிஸ்துவைப் போல மேலே பாருங்கள்:
யோவான் 17:1  இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து….
மேலும்  சங்கீதம் 123:1  பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரேஉம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். -என்ற வார்த்தையின்படியும் எப்போதும் மேலே, கர்த்தரின் பிரசன்னத்தையே நாடினால், நமக்கு ஒரு குறையுமில்லையே..
(சங்கீதம் 34:5  அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.)
கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்துக் காப்பாராக! ஆமென்!
(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு
இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)

For WORD for LIFE*

By GRACE ministries

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)


0 comments:

Post a Comment