15 Apr 2013


<<போதும் என்ற மனது>>

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்துஉங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்நான்உன்னைவிட்டு விலகுவதுமில்லைஉன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (எபி 13:5)
அன்புநேசர் இயேசுவின் பெயரால் வாழ்த்துக்கள்!
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லைஉன்னைக் கைவிடுவதுமில்லை என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். எனவே, நாம் போதும் என்கிற மனநிலையோடு இருக்கவேண்டும் என ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.
போதும் என்கிற மனம் வந்துவிட்டாலே வாழ்வில் 90% பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பொருள் சேர்க்க நல்வழியில் முயல்வது தவறே இல்லை. சேமித்து வைப்பதைக் குறித்து நீதிமொழிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம். சேமிப்பைப் பற்றி எறும்பினிடம் சென்று கற்றுக்கொள்ள ஆண்டவர் வலியுறுத்துகிறார். மேலும் சேமிக்காதவர்களைச் சோம்பேறி என்றே வேதம் அழைக்கிறது. அதேசமயம், சேமித்ததை பிறர் பயன்பாட்டிற்கென உபயோகிக்கவும் நம் வேதம் அறிவுறுத்துகிறது.
எதிர்கால வாழ்வுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் சேமிப்பதோடு, இல்லாதவர்கள், தரித்திரர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு கொடுத்து கர்த்தரின் அன்புப் பிரமாணத்தை நிறைவேற்ற நாம் கடனாளிகள்தான். அப்படிப்பட்ட உதவும் பண்பும், மிஷனெரி ஊழியங்களைத் தாங்கும் குணமும் நமது செல்வத்தை இன்னமும் பெருக்குமே தவிர குறைக்காது. இறைக்கிற கிணறு ஊறும் அல்லவா?
பொருள் சேர்க்கும் ஆசையில் பொல்லாத வழியில்; ஏமாற்றி; குறுக்கு வழியில் சம்பாதிப்பது கர்த்தரின் அருளை நம்மைவிட்டு எடுத்துப் போடும் என்பதும், கடைசியில் கடனாளியாக்கிவிடும் என்பதும் உண்மை!
வேதத்தில் யாக்கோபின் சகோதரனாகிய ஏசா சொல்வதைப் பாருங்கள்!
அதற்கு ஏசாஎன் சகோதரனேஎனக்குப் போதுமானது உண்டுஉன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்! (ஆதி 33:9)
உயிருக்கு பயந்த யாக்கோபு, ஏசாவுக்கு கொடுத்த வெகுமதிகளை எப்படி மறுக்கிறார் பாருங்கள்.
நாமும் சில வேளைகளில் போதும் என்று சொல்லுகிறோம். ஆனால் வாழ்வில் அனேக சோதனைகளைக் கண்டு, சோர்வுற்று, எலியா போலத்தான் சொல்லுகிறோம்.
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய்ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்துதான் சாகவேண்டும் என்றுகோரிபோதும் கர்த்தாவேஎன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன்அல்ல என்று (1ராஜா 19:4)

ஆனால் கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறவைகள் வேறு!

சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்அப்பொழுது நாம்காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்துமதுபானம்பண்ணிகளியாட்டுச்செய்துவெறிகொண்டு,அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம் என (1பேது 4:3) ல் வாசிக்கிறோம். பழைய பாவ வாழ்க்கை வாழ்ந்தது போதும்.
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்துஉங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;. (எபி 13:5) பண ஆசை வேண்டாம்! உள்ளது போதும்!
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். (1 தீமோ 6:6) என போதுமென்கிற மனது வலியுறுத்தப் படுகிறது.
முடிவாக மிகுந்த பெலவீனத்தின் மத்தியில் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கர்த்தர் இயேசு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா?
அதற்கு அவர்என் கிருபை உனக்குப்போதும்பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். (2 கொரி 12:9).
ஆம் பிரியமானவர்களே நாம் இப்போது எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தாழ் நிலையில் இருந்தாலும், பலவீனங்களானாலும், இழப்புகளின் மத்தியில் இருந்தாலும் அவைகளைத் தாண்டி வர, ஆண்டவர் இயேசுவின் கிருபை ஒன்றே போதும்!
நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அன்பர் இயேசுவின் கிருபை ஒன்றே போதும் என்ற இனிய மனநிலை நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் போதும். அந்த கிருபை எல்லாவற்றையும் நமக்காய் செய்துமுடிக்கும்! அல்லேலூயா!

கர்த்தர் எதிபார்க்கிற ‘’போதுமென்ற மனதை’’ப் பெற்றுக்கொள்ள கருத்தாய் ஜெபிப்போமா?

ஆமென்!

(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு

இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் 


இணையுங்கள்!)

For WORD for LIFE*

By GRACE ministries

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)


0 comments:

Post a Comment