Jesus christ the WORD for LIFE*
<<இதயம் இருக்கின்றதா?>>
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8)
அல்லேலூயா!
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்! மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பும் – இதயமே!
எனவேதான் இருதயம் என்பது உலகவாழ்விலும், ஆவிக்குரிய வாழ்விலும் மிகமுக்கியமாய் இருக்கிறது. இருதயம் செயலிழந்தால் வாழ்வு முடிந்தது. அதற்காக இருதயம் நன்றாக செயல்பட்டால் மட்டும் மனிதர் வாழ்வதாக அர்த்தம் இல்லை. உண்மையான வாழ்வு பரலோக வாழ்வு அன்றோ! இருதயத்தை கர்த்தரிடம் ஒப்படைப்பது என்பது முழுவாழ்வையுமே ஒப்படைப்பதாக உள்ளது. சுத்த இருதயம் என்பது சுத்தமான வாழ்வுதானே! சுத்த இருதயமுள்ள இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே அன்றோ இருக்கிறார்!
சுத்த இருதயத்தோடு, நாம் விரும்ப வேண்டிய பல இருதயங்கள் வேதபுத்தகத்தில் உண்டு! பின்வரும் வார்த்தைகளை முழுஇருதயத்தோடு ஏறெடுப்போமா?
தேவனே! நான் பிறருக்கு மருந்தாக மாறவேண்டும். எனவே மன மகிழ்ச்சியான இருதயத்தை தாரும். (நீதி 17:22)
தேவனே! உம்மால் நான் புறக்கணிக்கப்படக்கூடாது. எனவே குற்றமுணர்ந்த இருதயத்தை என்னில் உண்டாக்கும். (சங் 51:17)
தேவனே! நன்மை தீமை இன்னதென்று நான் பகுத்தறியவேண்டும். எனவே ஞானமுள்ள இருதயத்தை தாரும் (1 இராஜா 3:9)
தேவனே! நான் உம்மைப் பாடிக் கீர்த்தனம் பண்ணவேண்டும். எனவே ஆயத்தமுள்ள இருதயத்தை தாரும். (சங் 57:7)
தேவனே! உமக்கு நல்ல கனிகளை தரத்தக்கதாக, உமது வார்த்தைகளை கேட்க
மட்டுமல்ல, அதன்படி நடக்கவும் விரும்புகிறேன். எனவே நன்மையான இருதயத்தை
தாரும் (லூக் 8:15)
தேவனே! என் முகம் எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டும். எனவே மகிழ்ச்சியான இருதயத்தை தாரும். (நீதி 15:13)
தேவனே! எஜமானாகிய உம்மைப்போல் நான் இருக்க வேண்டும். எனவே சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள இருதயத்தை தாரும். (மத் 11:29)
தேவனே! நான் நியாயப் பிரமாணமாகிய பழைய உடன்படிக்கை யிலிருந்து
விடுவிக்கப்பட்டு, கிருபையாகிய புது உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை
அனுபவிக்கவேண்டும். எனவே உம்முடைய வாக்குத்தத்தமான புதிய இருதயத்தை தாரும்.
(எசேக் 36:26)
தேவனே! உமது கற்பனைகளையும் சட்டங்களையும் நான்
பின்பற்ற விரும்புகிறேன். எனவே உம்மைவிட்டுப் பிரியாத ஒரே இருதயத்தை
தாரும். (எசேக் 11:19,20)
தேவனே! என் பகைஞரைப் பார்த்து நான் நகைக்கவேண்டும். எனவே உமது மீட்பில் எப்போதும் குதூகலிக்கும் இருதயத்தை தாரும். (1 சாமு 2:1)
தேவனே! திடமான வாழ்க்கை நான் வாழவேண்டும். எனவே அமைதியான இருதயத்தை தாரும். (நீதி 14:30)
தேவனே! நான் பிறரை தாராளமாக மன்னிக்கவேண்டும். எனவே மனதுருக்கமான இருதயத்தை தாரும். (எபே 4:32)

நான் உம்மை தரிசிக்கும்படி சுத்தமுள்ள இருதயத்தைத் தாரும். (மத்தேயு 5:8)
தேவனே! என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும், வேதனை உண்டாக்கும்
வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
(சங் 139:23,24)
ஆமென்!
(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு
இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)
For WORD for LIFE*
By GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
Web id: wordforlifetamil.blogspot.com
Email : graceministriestpr@gmail.com
0 comments:
Post a Comment