கொஞ்சம் சும்மா இருக்கறீங்களா?
Praise the Lord!
தலைப்பை பார்த்தவுடனே வீட்டுல வரும் பேச்சு போல இருக்கேன்னு யோசிக்கிறீங்க இல்லையா?ஒருவேளை ஆண்டவரே.. நம்மைப் பார்த்து இப்படி சொன்னால் எப்படி இருக்கும்?
ஆம், நாம் சில நேரங்களில் சும்மாயிருக்க வேண்டுமென நம் தகப்பன் எதிர்பார்க்கிறார். சும்மா என்றால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா அல்ல! கர்த்தரின் பாதத்தில் ஜெபசிந்தையோடு அமைதலாக காத்திருக்க சொல்லுகிறார்!
“கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான். (யாத் 14:14) என வேதத்தில் வாசிக்கிறோம்! (வாசிக்கிறோமா?)
நாம் நம்முடைய கஷ்டங்கள்; கண்ணீர்கள்; கவலைகள்; போராட்டங்கள்; பிரச்சனைகள்; தேவைகளின் மத்தியில் அவைகளிலிருந்து விடுபட நாமே அதிகமாக முயற்சி எடுக்கிறோம். குறிப்பாக அந்த நேரத்தில்தான் நாம் கர்த்தரின் செயல்பாட்டைக் காணமுடியாதபடி; ஒரு அற்புத்தை பெற இயலாதபடி அவதியுறுகிறோம்!
ஆனால் கர்த்தர், தம் தாசனாகிய மோசே –யின் மூலமாக நம்மிடம் சொல்லுவது என்ன தெரியுமா? நான் உங்களுக்காக யுத்தம்பண்ணுவேன்! – என்பதுதான். சர்வ வல்லமையுள்ள ஆண்டவர் நமக்கு விடுதலையையும், அற்புதங்களையும்; ஆசீர்வாதங்களையும் கொடுக்க ஆண்டவர் மிகவும் விருப்பமாய் இருக்கிறார்.
நீச்சல் தெரியாமல் தண்ணீரில் விழுந்தவரை உடனே காப்பாற்ற முயன்றால் இருவருமே மூழ்க நேரிடும். விழுந்தவர் அமைதலாகும்போதுதான் அவரை காப்பாற்ற முடியும்.
கர்த்தர் நம்மை எல்லாவிதமான பெலவீனங்களில் இருந்தும்; போராட்டமான சூழ்நிலைகளிலிருந்தும் விடுவிக்க வல்லவர் என்பதை விசுவாசத்தோடு நம்பி அவர் சமூகத்தில் காத்திருந்து…..
இஸ்ரவேலர்கள் பார்வோனின் சேனைகள் மற்றும் செங்கடலில் இருந்து அற்புதமாக பாதுகாக்கப் பட்டதுபோல, நம்மையும் கர்த்தர் இயேசு கிறிஸ்து எனும் பெயரால் பாதுகாப்பார்: காப்பாற்றுவார்! – என்பதை உணர்வோமா?
கொஞ்சம் சும்மா இருந்து, கர்த்தரை நம் வாழ்வில் செயல்பட அனுமதிப்போம்; அற்புதம் காண்போம்!
Praise the Lord Jesus Christ!
0 comments:
Post a Comment