10 Apr 2013


WORD for LIFE*
வாங்க! வாங்க!!
(மாற்கு 1:45) …எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு (இயேசுவிடம்) வந்தார்கள்.
அல்லேலூயா!
கர்த்தருக்கே மகிமை! மேற்காணும் வேதவார்த்தையின்படி எட்டுத்திசையிலிருந்தும் ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவிடம் வந்தார்கள்.
ஜனங்கள் ஆண்டவரிடம் வந்ததற்கு பல காரணங்கள் உண்டு.
1)   சிலர் அவரைப் பார்க்க வந்தனர்
2)   சிலர் அவர் செய்யும் அற்புதங்களைக் காண வந்தனர்
3)   சிலர் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வந்தனர்
4)   சிலர் அவரது பேச்சில் குற்றம் காண வந்தனர்
5)   சிலர் தங்கள் சரீரத்தின் வியாதிகளிலிருந்து குணமடைய வந்தனர்
6)   சிலர் அவரோடு கூட தங்கவிரும்பி வந்தனர்
7)   சிலர் அவரை ஒரு தலைவராக நினைத்து வந்தனர்

இப்படி பல காரணங்கள் உண்டு!என்றாலும், தேவனாகிய கர்த்தர் தம் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பியதற்கு; அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதராகிய நம்மைத் தேடி வந்ததற்கு ஒரே காரணம்தான் உள்ளது.
அது நம் ஒவ்வொருவரையும் பாவம் என்கிற அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, பரிசுத்தப்படுத்தி பிதாவின் இனிய சன்னிதியாகிய பரலோகத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.
என்னதான் அவரைப் பார்த்தாலும்; அற்புதங்களைக் கண்டாலும்; வார்த்தைகளைக் கேட்டாலும்; சுகம் பெற்றாலும்; அனேக ஆசீர்வதங்களைப் பெற்றாலும் கூட நாம் நமது இருதயங்களை சுத்திகரித்து ஆண்டவரிடம் பாவமன்னிப்பை பெற்று நற்சாட்சியோடு வாழாவிட்டால் எல்லமே (இந்த வாழ்வே) வீண்தான்.
வெறும் ஆசீர்வாதங்களும், சரீர சுகங்களும் பரலோகம் செல்ல உதவாதே!
இன்றே நம்மையும், நம் வாழ்வையும் இயேசுவிடம் அர்ப்பணித்து அர்த்தமுள்ள வாழ்வு வாழ அன்பு ஆண்டவர் நம்மை அழைக்கிறார். ஓடி வருவோமா.. ஆட்டுக்குட்டிகளாய்… நம் மேய்ப்பரிடம்…
ஆமென்..

By
GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
Email: graceministriestpr@gmail.com

0 comments:

Post a Comment