Jesus christ the WORD for LIFE*
<<பாக்கியவானா? சாத்தானா?>>
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு16:17)
அல்லேலூயா! கர்த்தர் இயேசுவே நேரடியாக அனைத்து சீடர்களின் முன்பாக பேதுருவிடம் நீ பாக்கியவான் என்று சொன்னபோது, பேதுருவின் மனது எப்படி துள்ளியிருக்கும். ஏதோ உலகத்திலேயே நான் தான் பேறு பெற்றவன் என எண்ணியிருப்பார். ஆனால், பிரியமானவர்களே சில நிமிடங்களில் நடந்ததென்ன தெரியுமா?
அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் ( மத்தேயு 16:23)
பாக்கியவான் என இயேசுவின் நாவில் சான்றிதழ் பெற்ற பேதுரு, சில நிமிடங்களிலேயே சாத்தானே என திட்டு வாங்கியது ஏன்? அவர் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்தித்ததனாலேதான்! நாமும் கூட பலவேளைகளில் தேவசித்தத்தின்படி நடந்து பாக்கியவான்களாகவும், பலவேளைகளில் மனுஷருக்கு ஏற்றபடி நடந்து சாத்தான்களாகவும் மாறிவிடுகிறோம். நம் ஆண்டவராகிய கர்த்தரோ நாம் மிகுந்த பாக்கியவான்களாக இருக்கவே விரும்புகிறார். நாம் பாக்கியவான் / பாக்கியவதியாக இருக்கத்தான் தமது வார்த்தையாகிய கிறிஸ்துவை வேதபுத்தக வடிவில் நமக்குக் கொடுத்து, அதன்படி நடக்க நம்மை அறிவுறுத்திகிறார்.
கர்த்தரின் பார்வையில் யார் பாக்கியவான் / பாக்கியவதி?
1. இரட்சிக்கப்பட்டவர் (உபாகமம் 33:29)
2. வேதத்தை தியானிப்பவர் (சங்கீதம் 1:2)
3. பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் (சங்கீதம் 32:1)
4. கர்த்தரையே நம்பியிருப்பவர் (சங்கீதம் 34:8)
5. வேத வார்த்தையின்படி நடப்பவர் (சங்கீதம் 119:1)
6. வார்த்தையைக் கேட்டு காத்துக்கொள்பவர் ( லூக்கா 11:28)
7. சோதனையை சகிப்பவர் (யாக்கோபு 1:12)
8. கர்த்தருக்குள் மரிப்பவர் (வெளி 14:13)
9. உயிர்த்தெழுதலில் கர்த்தரோடு பங்கடைபவர் (வெளி 20:6)
என அனேகரைப் பார்க்கலாம்.
கர்த்தரின் பார்வையில் யார் சாத்தான்?
1) தேவபிள்ளைகளுக்கு விரோதி (1 நாளா 21:1)
2) உத்தமர்களைக் கவனித்து கவிழ்க்க விரும்புகிறவன் (யோபு 1:8)
3) தேவபிள்ளைகளின் உடமை; உறவுகளை அழிப்பவன் (யோபு 1ம் அதிகாரம்)
4) இடறல் உண்டாக்குபவன், மனுஷருக்கேற்றபடி சிந்திப்பவன் (மத் 16:23)
5) இருதயத்திலிருந்து வசனங்களை எடுத்துப்போடுபவன் (மாற் 4:15)
6) பெலவீனங்களைக் கொடுத்து கட்டுகிறவன் (லூக் 13:16)
7) சுளகினால் புடைப்பது போல சோதிப்பவன் (லூக் 22:31)
8) பொய் சொல்பவன் (அப் 5:3)
9) இச்சைகளைத் தூண்டுபவன் (1கொரி 7:5)
10) மோசம் போக்குபவன், தந்திரமுள்ளவன். (2 கொரி 2:11)
11) நற்காரியங்களைத் தடைபண்ணுபவன் (1தெச 2:18)
12) பொய்யான அற்புதங்கள் செய்பவன் (2தெச 2:9)
என சாத்தானின் பல குணாதிசயங்கள் வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவைகளைப் படித்து, தியானித்து சாத்தானின் குணங்களை அகற்றி, பாக்கியவனின் குணங்களை நம்மில் வளர்த்தி, பாக்கியவான்களாக / பாக்கியவதிகளாக மாற தேவன் தாமே கிறிஸ்துவின் கிருபையினால் நம்மை வழி நடத்துவாராக!
ஆமென்!
(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு
இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில்
இணையுங்கள்!)
For WORD for LIFE*
By GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
Web id: wordforlifetamil.blogspot.com
Email : graceministriestpr@gmail.com
0 comments:
Post a Comment