10 Apr 2013


WORD for LIFE*

புள்ளைங்களா? தொல்லைங்களா?
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!
இனிய விடுமுறை நாட்கள் பிள்ளைகளுக்கு! பெற்றோர்களுக்கோ… அட போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவுக்கு குறும்புகள். சின்ன சின்ன சண்டைகள் –என சில (பல) சமயங்கள் வீடே ரணகளமாகிவிடும். எப்போதான் ஸ்கூல் திறப்பாங்கன்னு யோசிக்கவேண்டியிருக்கும்.
     நம்முடைய தேவனாகிய கர்த்தரோ நம்மீது உள்ளதைப் போலவே நம் பிள்ளைகள் ஒவ்வொருவர் மீதும் மிகவும் கரிசனையோடு இருக்கிறார். ஆனால், அவர்களை கர்த்தருக்கு ஏற்றவர்களாய் வளர்க்கும் பொறுப்பையோ நம்மை நம்பி நம்மிடம் கொடுத்துள்ளாரே!
     வேதத்தில் காணும் ஒரு சில சிறுவர் / சிறுமியர் என்ன செய்தார்கள் தெரியுமா?
1)   மிரியாம் (மோசேயின் சகோதரி)– யாத்திராகமம் 2:1-8 தியானிக்கவும்!
ஞானமாய் செயல்பட்டுமோசே எனும் தன் தம்பிக்கு உண்மையான அம்மாவையே பால்கொடுத்து வளர்க்கும்படியும் கர்த்தருக்கு ஏற்றபடி வைராக்யமாய் இருக்கவும் பேருதவி செய்தார்
2)   சிறைபிடிக்கப்பட்ட சிறுபெண்(நாகமான் வீட்டின் பணிப்பெண்) – 2இராஜா 5 ம் அதிகாரம் தியானிக்கவும்!
நாகமான் என்ற சீரிய படைத்தலைவனின் குஷ்டரோகம் நீங்க தைரியமாக சமாரியாவின் தீர்க்கதரிசியைப் பற்றி சொல்லி பெரியதோர் அற்புதத்துக்கு காரணமானார்
3)   5 அப்பம் 2 மீன்கள் கொடுத்த சிறுவன் – யோவான் 6:1-13 தியானிக்கவும்!
அனேகர் பசியாய் இருந்த வேளையில் தனக்கென்று இருந்த 5 அப்பம் 2 மீன்களை ஆண்டவரின் தியாகமாய் கரங்களில் கொடுத்து 5000 பேருக்கும் மேல் சாப்பிட்டு திருப்தியடையும்படி நடந்த அற்புதத்துக்கு காரணமானார்.
4)   சாமுவேல் எனும் பிள்ளை– 1சாமுவேல் 2:18 தியானிக்கவும்!
எல்லாப்பிள்ளைகளும் விளையாடிக்கொண்டிருக்க அம்மாவின் பொருத்தனைக்கு கீழ்ப்படிந்துகர்த்தரின் சமூகத்தில் இருந்து, ராஜாக்களையே அபிஷேகம் செய்யும் தீர்க்கதரிசியாய் மாறினார்.
5)   12 வயது இயேசு கிறிஸ்து– லூக்கா 2:42-46 தியானிக்கவும்!
சிறுவயதிலேயே பிதாவின் சமூகமாகிய தேவாலயம் செல்லவும், வேதவார்த்தைகளைக் குறித்த ஆலோசனைகள் செய்யவும் விரும்பின
ஆண்டவர் பெற்ற உயர்வு – வானோர்; பூதலத்தோர் யாவரும் முடங்கும்படி பிதாவினாலே பெற்ற மேலான நாமம்!
6)   தீமோத்தேயு – 2தீமோ 3:15 தியானிக்கவும்!
சிறுவயது முதலே வேத எழுத்துக்களைக் கற்று, விசுவாசத்தில் உத்தம குமாரனாக மாறிய ஊழியன்!
7)   ஈசாக்கு : தகப்பானின் பேச்சுக்கு கீழ்ப்படிந்து மரணத்தின் விளிம்பு வரை சென்று தப்பினார். ஆண்டவர் இயேசுவுக்கு முன்னடையாளமானார்.

பிரியமானவர்களே! யாருக்குத் தெரியும்? நம்முடைய பிள்ளைகளும் பின்னாளிலே, இவர்களில் ஒருவரைப்போல வரலாம் இல்லையா? ஆண்டவரின் சித்தம்கூட அதுதான். ஆனால்,
 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். “ - நீதி 22:6ன் படி நாம் நமது பிள்ளைகளை கர்த்தரின் வழியில் வளர்க்காவிடில், அவர்களால் அவதியுறுவது நிச்சயம்!
உலக காரியங்களில் திறமையை வளர்த்த,பிள்ளைகளை அனேக பயிற்சிகளுக்கு அனுப்ப திட்டம் போட்டிருப்போம். அதே சமயம் பிள்ளைகளை ‘’விடுமுறை வேதாகம பள்ளி’’ களுக்கும் அனுப்ப மறவாதிருப்போம்!
கூடவே நாமும் குழந்தைகளைப் போல கள்ளங்கபடமற்று வாழ்ந்தால்தால் தானே நமக்கும் பரலோகவாழ்வு!
நன்றாய் ஜெபியுங்கள்!
பிள்ளைகள் தொல்லைகள் அல்ல! நமது ஆண்டவரின் தோட்டத்து முல்லைகள்!
ஆமென்! Praise the Lord!

0 comments:

Post a Comment