Jesus christ the WORD for LIFE*
<<எங்கே நிற்போம்?>>
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும்பாவியும் எங்கே நிற்பான்? (1பேதுரு 4:18)
பரிசுத்தர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!
நாம் ஒவ்வொருவரும் சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையின் இரண்டு பிரிவுகள் - ஒன்று நீதியின் பாதை, இரண்டாவது துன்மார்க்கமான பாதை! மேற்காணும் வேத வார்த்தையில் பார்க்கிறோம் நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால்.. என்று. அவரவர் தன் தன் பார்வைக்கு அல்ல, தேவனுடைய பார்வையிலேயே நீதிமானாய் இருக்கவேண்டும். சுய நீதியை அல்ல, தேவ நீதியை நிறைவேற்றும் பிள்ளைகளாய் இருக்க வேண்டும். கர்த்தரின் வருகையில் நாம் எங்கே நிற்கப் போகிறோம்? நீதியின் வழியிலா அல்லது அநீதியின் வழியிலா என்பதை தீர்மானம் செய்வோம்.
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே;துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்(நீதி 11:31)
இஸ்ரவேலரின் முறுமுறுப்பால் சற்றே பதறிப்போன மோசேகன்மலையோடு பேசாமல் அதை அடித்தார். தேவனால், நீ இந்த கானானுக்குள் நுழைவதில்லை, என சொல்லப்பட்டு அந்த நீதிமான் இந்த பூமியில் சரிக்கட்டப்பட்டாரே!
இஸ்ரவேலரை தொகையிட்டு; பத்சேபாளோடு பாவம் செய்து என தாவீது ராஜா செய்த தவறுகளுக்கு, இஸ்ரவேலின் மேல் வாதை வந்ததே! தாவீது பத்சேபாளுக்குப் பெற்ற மகன் மரித்தானே! அந்த நீதிமானுக்கு சரிக்கட்டப்பட்டதும் உண்மையே!
இந்த உலகத்தில் நாம் நீதியின் வழியில் இருந்துகொண்டே செய்யும் சிலபல தவறுகளுக்கும் இந்த பூமியில் நாம் வாழும் காலத்திலேயே சரிக்கட்டப்படும். அது ஏதோ ஒரு வியாதியாகவோ, நஷ்டமாகவோ, ஏதேனும் இழப்பாகவோ இருக்கலாம். அனேகர் எந்த தவறும் செய்யாத போதும், அதிக கஷ்டத்திலும், நஷ்டத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் நான் ஏன் துன்பப்படுகிறேன்? வேதனைப்படுகிறேன்? எனக்கு ஏன் இந்த வியாதி? எனக்குமட்டும் ஏன் இந்த பாடுகள்? என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு கர்த்தரே தரும் வார்த்தை, உங்கள் முடிவு சம்பூரணமாய் இருக்கப்போகிறது என்பதுதான்.
நீதியின் வழியை உணராமல் சுகபோகமாய் வாழ்தல் நரக வேதனையையே பின்னாளில் கொடுக்கும். உதாரணம்: லாசருவைக் கண்டுகொள்ளாத ஐசுவரியவான். நீதியின் வழியில் வாழ்ந்து துன்பப்படுவோர் முடிவு ஆசீர்வாதமாய் இருக்கும்.உதாரணம்: யோபு பக்தன்.
நீதிமானுடைய இரட்சிப்பு நிச்சயமே! நித்தம் அடைக்கலம் கர்த்தர்தாமே! உதவி செய்து காத்திடுவார். உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்!
நீதியின் வழியில் பாடுபட்டு பரலோகமா அல்லது நீதியின் வழியில் நடவாமல் சுகபோகமாய் வாழ்ந்து நரகமா என்பதை இன்றே முடிவு செய்து, நம் வாழ்வை ஆண்டவர் இயேசுவின் கரங்களில் அர்ப்பணிப்போம். அவர் ஒருவரே நம்மை தமது வழியாகிய நீதியின் வழியில் நடத்தி நம்மைக் காப்பார். அவர் வருகையின் நாளில் நாம் அவரருகே நிற்போம்!
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ளசந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களைமாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரேஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக்கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும்எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (யூதா 24,25)
ஆமென்!
(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு
இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)
For WORD for LIFE*
By GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
Web id: wordforlifetamil.blogspot.com
Email : graceministriestpr@gmail. com
0 comments:
Post a Comment