= இன்றைய தியானம் = << அற்பம்? அற்புதம்! >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அற்பமாக எண்ணப்படுகிறவர்களைக் கர்த்தர் காண்கிறார். (நாம் இருக்கின்ற சூழ்நிலையில்), படிக்கின்ற இடத்திலா? பணிபுரியும் இடத்திலா? ஊழியத் தளத்திலா? சகோதரர்கள் நடுவிலா? நண்பர்கள் கூட்டத்திலா? எங்கு, எவர் நம்மை அற்பமாக எண்ணிணாலும் சரி! கர்த்தராகிய இயேசு தமது அற்புதத்தின் மூலம் நம்மை உயர்த்த வல்லவர். நாம் செய்யவேண்டியது என்ன? அவரிடம் வந்து, நம்பிக்கையோடு, வேண்டிக்கொள்வது மட்டுமே! மனிதர்கள் நம்மேல் பரிதாபம்தான் கொள்ள முடியும். கர்த்தர் ஒருவரால்தான் நமது கேள்விகளுக்கெல்லாம் பதிலாக ஓர் அற்புதம் செய்யமுடியும். ஆதி 29:31,32 ல் லேயாள் கண்ட அற்புதம்! நீதி 30:25 ல் எறும்பு பெற்ற சேமிக்கும் குணாதிசயம்! அப்போஸ் 4:11 ல் இயேசு மூலைக்கு தலைக்கல்லான அற்புதம்! 1 கொரி 1:28 ல் இழிவானவைகள் தெரிந்துகொள்ளப்பட்ட அற்புதம்! அற்பமாய் ஆடுமேய்த்த தாவீது அரசனாக மாறிய அற்புதம்! அடிமையாய் இருந்த யோசேப்பு உயர்த்தப்பட்ட அற்புதம்! அற்பமாய் எண்ணப்பட்ட யோபு, மீண்டும் துளிர்த்தெழுந்த அற்புதம்! அடிமைத்தனமான வாழ்விலும், மேன்மைபெற்ற தானியேல் கண்ட அற்புதம்! இன்றும் நம்மை மாற்ற காத்திருக்கிறது. நம் நேசரை நோக்கிக் கூப்பிடுவோமா? இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்( மத் 18:10) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! அற்பமாய் எண்ணப்படுகின்ற எங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்யப்போவதற்காக ஸ்தோத்திரம்! உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். உயர்த்தும்! வழி நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment