= இன்றைய தியானம் = << குறையற்ற வாழ்வு >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என உலகம் சொல்லும். ஆனால், தேவனற்றவன் ஜீவனற்றவன் என வேதம் சொல்லுகிறதே! பிறகு குறைகளைப்பற்றி என்ன? நாம் வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதாகவேண்டுமெனில், நாம் ஜீவனுடையவர்களாய்; தேவனுடையவர்களாய் வாழவேண்டும். நிறைவான கிறிஸ்து நம் உள்ளத்திலிருந்தால், எந்தக்குறையும் குறையே அல்ல. குறைவற்றதை நாம் கொண்டிருந்தால்தான் நாம் குறைவற்ற வாழ்வு வாழமுடியும். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:7) என வாசிக்கிறோம். குறைவற்ற வேதம் நம் வீட்டில் இருந்தால் மட்டும் போதாது. அதற்கு கீழ்ப்படிவதால் மட்டுமே குறைவுகள் நீங்கும். கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு, கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு, கர்த்தரைத் தன் மேய்ப்பராகக் கொண்டிருப்போருக்கு குறையில்லை. ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் குறைவை மாற்றி நிறைவைத் தாரும். உம் வர்த்தைகளுக்கு கீழ்ப்படிய எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment