= இன்றைய தியானம் = << புத்தியாய் நடப்போம் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! பெற்றோர் தம் பிள்ளைகளை மிகவும் சிரத்தையெடுத்து, பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புவது, அவர்கள் ஞானவான்களாக, புத்திசாலியாக வளர்ந்து, வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றுதான். ஆனால், ஒவ்வொருவரும், ஆவிக்குரிய தனிப்பட்ட வாழ்வில் உண்மையான புத்தியோடு இருந்தால், என்னசெய்வார்கள் என்று பார்ப்போமானால், அவர்கள் அ) உண்மையாய் வேதம் வாசிப்பார்கள், ஆ) உண்மையாய் ஜெபிப்பார்கள், இ) தேவனுக்கும், மனிதருக்கும் முன்பாக அன்போடு, உண்மையாக இருப்பார்கள், ஈ) முடிந்தவரை பிறருக்கு உதவிசெய்வார்கள், உ) ஒழுங்காய் ஆலயம் செல்வார்கள், ஊ)அனைத்துத் தேவைகளுக்கும் தேவனை நோக்கிப்பார்ப்பார்கள். இப்படிப்பட்ட புத்தியுள்ள, கர்த்தரைச் சார்ந்துகொள்ளும் பெண்களும், ஆண்களும் தங்கள் வீடாகிய, குடும்பத்தைக் கட்டுகிறார்கள். எப்படியெனில் தேவனே அவர்கள் குடும்பத்தைக் கட்டுகிறார். மேலும், தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.(2 தீமோ 1:7) எனவே, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.(எபி 10:25) ஏனென்றால், நாம் கர்த்தரின் விருந்தில் மணவாளனோடு பங்கெடுக்கப்போகும் புத்தியுள்ளவர்கள்! அல்லேலூயா! ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உமக்கு ஸ்தோத்திரம். புத்தியுள்ள ஸ்திரீகளாய், புத்தியுள்ள பிள்ளைகளாய் எங்களை மாற்றும். பரிதபிக்கப்படத்தக்கவர்களாய் அல்ல, பாத்திரவான்களாக வழிநடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment