= இன்றைய தியானம் = << கிரியைகளுக்கு பலன் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நம் ஒவ்வொரு செயல்களுமே தேவனால் கவனிக்கப்படுகின்றன. ஒவ்வொரு செயல்களுக்கும், அதற்கேற்ற பலன் உண்டு. அவர் அல்பா(தொடக்கம்) வும், ஒமேகா(முடிவு) வுமாக இருப்பதால், இறந்த, வாழ்கிற, பிறக்கப்போகிற யாதொருவரும், யாரைப்பற்றியும் அவரிடம் சாட்சிகொடுக்கத் தேவையில்லை. ஆனால், கர்த்தர் கவனியார், தேவன் அறியார் என நினைத்து, நம்மை நாமே வஞ்சியாதிருப்போம். யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. என்று எரேமியா 32:19 ல் வாசிக்கிறோம்! சிந்தித்தாலும், பேசினாலும், எதைச் செய்தாலும், கர்த்தர் என்னைப் பார்க்கிறார் என்ற உணர்வோடு இருப்போம்! பரிசுத்தரின் பரிசுத்தப் பாதையில்! மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.(நீதி 5:21) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உம்முடைய கண்கள் எங்கள்மேல் இருப்பதற்காக நன்றி! எங்கள் கண்களையும் உம்மேல் வைக்கிறோம். பரிசுத்தமாய் சிந்திக்க, பேச, செயல்பட உதவி செய்யும். நற்பலனையடைய கிருபைதாரும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment