= இன்றைய தியானம் = << மெய்யும் பொய்யும் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! எல்லாவற்றிலும், உண்மையும் போலிகளும், எதிரிடையானவைகளும் உண்டு. கிறிஸ்துவும் – அந்தி கிறிஸ்துவும் பகலும் – இரவும் யூதாவின் சிங்கமும் – கெர்ச்சிக்கிற சிங்கம் போன்றவனும் பரலோகமும் – நரகமும் போல, கல்லிலும், முள்ளிலும் கூட உண்டு! ஆவியானவரின் துணையில்லாது கர்த்தரின் வார்த்தைகளிலுள்ள இரகசியங்களை உணர்ந்துகொள்வது எளிதல்ல! மோசேயோடு கர்த்தர் முட்செடியின் நடுவிலிருந்து பேசினார்! (கர்த்தருடையது) நியாயாதிபதி 9ம் அதிகாரத்தில், முட்செடி உலகத்தின் அதிபதியானது (பிசாசினுடையது) அதேபோல கர்த்தர் இயேசுவின் தலையில் வைக்கப்பட்ட முள்கிரீடம், நமது பாவங்கள் ஏற்படுத்தும் வலிக்கு ஒப்பானது. வேதத்தைப் படிப்பது அல்ல, ஆராய்ந்து நிதானிப்பது புது அனுபவத்தைத் தரும். ஆராய்ந்து படிப்போம்! சத்துருவின் காரியங்களை ஒதுக்கி, கர்த்தரின் வார்த்தைகளை எடுத்து, கீழ்ப்படிந்து வாழ்வோம்! மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.(எசேக் 2:6) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! நீர் எங்கள் கரங்களில் தந்துள்ள பொக்கிஷமான வேதபுத்தகத்துக்காக உமக்கு நன்றி! ஆராய்ந்து வாசித்துப் பயன்படுத்த, ஆவியானவரின் வழி நடத்துதலைத் தாரும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment