= இன்றைய தியானம் = << கர்த்தர் நாமம் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6) சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவன், அன்புள்ள குமாரனாக வெளிப்பட்டார். இன்றைய நாட்களில், வல்லமை மிக்க தூய ஆவியானவராக செயல்படுகிறார். அவர் இயேசு கிறிஸ்து எனும் பெயரின் வல்லமையால், பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாக, இன்றும் அற்புதங்கள்; அதிசயங்கள் செய்கிறார். திரித்துவம் என்ற வார்த்தை, வேதத்தில் இல்லாவிட்டாலும் கூட, மூவரும் ஒருவராக நம்மில் வாசம் செய்கிறார்கள் என்று வேதத்தில் நாம் வாசிக்கலாம். யார் அந்த கடவுள்? அவர் பெயர் என்ன? அவரை எப்படி அழைப்பது? என்று கேட்டால், வேதம் திட்டமும் தெளிவுமாகப் போதிக்கிறது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று! தன்னை மூன்று விதங்களில் வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தருக்கு குழப்பமில்லை! அவர் ஒருவரே! ஆனால் ஆதாய ஊழியத்தில் குழப்பங்கள் மிக அதிகமே! விசுவாசிகளை நன்றாகக் குழப்பினால்தானே, அந்த குட்டையில் என்ற மீன் பிடிக்க முடியும்! பிதாவாகிய தேவனை ஒதுக்கவும் கூடாது! கர்த்தராகிய இயேசு மட்டும்தான் என எண்ணவும் கூடாது! பரிசுத்த ஆவியானவரை இழிவுபடுத்தவும் (மட்டுப்படுத்த) கூடாது! மூன்று பேரும் சரிசமமே! சரியான ஜெபம் என்பது, பிதாவாகிய தேவனிடம், பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, கர்த்தராகிய இயேசுவின் பெயரால் வேண்டிக்கொள்வதுதான்! கிறிஸ்துவும் அதைத்தானே கற்றுக்கொடுத்தார்! குமாரனன்றி, பிதாவுமில்லை! பிதாவையன்றி குமாரனுமில்லை! தூய ஆவியானவருமில்லை! (யோவான் 17). உலகப் படைப்பிலிருந்து கடைசி வரை மூவரும் ஒருவரே! பிதாவை மகிமைப்படுத்துவோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கனப்படுத்துவோம்! தூய ஆவியினால் நிறைந்திருப்போம்! அவர் நமக்கு சகலத்தையும், தெளிவாக போதித்து வழி நடத்துவார். ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தி, பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாக, தூய ஆவியானவர் வழியாக, அனைத்தையும் செய்து முடிக்க, கர்த்தர் தம் நாமத்தை நம் நெற்றிகளில் எழுதி வைத்திருக்கிறார்! தெளிவோம்! ஜெபிப்போம்! ஜெயிப்போம்! கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.(நீதி 18:10) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உமது வார்த்தைகளுக்கு நன்றி! உம்மைப் புரிந்துகொள்ள உதவி செய்ததற்காக உமக்கே ஸ்தோத்திரம்! தூய ஆவியானவர் எங்களை, உமது வார்த்தைகளின்படியே செம்மையான வழியில் நட்த்த எங்களை ஒப்புவிக்கிறோம்! மீட்பரும்; இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment