= இன்றைய தியானம் = << ஜீவனோடு… >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! செத்த மீன்கள் நீரோட்டத்தால் அடித்துச்செல்லப்படும்! உயிருள்ள மீன்களோ நீரோட்டத்தை எதிர்த்து நீந்திச் செல்லும்! நாம் ஜீவனுள்ள கர்த்தரின் மீன்கள்! இந்த உலக வழக்கங்கள், பாவப் பழக்கங்கள்! கோணலும் மாறுபாடுமான காரியங்கள்! இச்சைகள்! காமவிகாரங்கள்! மாம்சத்தின் கிரியைகள்! ஆகிய அனைத்தையும், விசுவாசத்தோடும், தேவன் தரும் பரிசுத்த ஆவியின் பலத்தோடும், இயேசு கிறிஸ்து என்னும் பெயரிலுள்ள அதிகாரத்தையும் பயன்படுத்தி, எதிர்த்து வெல்ல வேண்டும். கர்த்தரை நோக்கி, நம் வாழ்க்கைப் பயணம் செல்லவேண்டும். தொடக்கமும், முடிவும் கர்த்தராகிய இயேசுவே! அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமானவர்! மேலும், (அவர்) தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.(மத்22:32) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! நீர் ஜீவனுள்ளவர், எங்களுக்காய் ஜீவன் தந்தவர்! இன்றும் ஜீவிக்கின்றவர்! அந்த ஜீவனோடு, அசுத்தங்களை எதிர்த்து வெற்றிகொள்ள உதவிடும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment