= இன்றைய தியானம் = << கர்த்தரின் கரங்கள் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தரின் கரங்கள்…. நம்மை உண்டாக்கிற்று (சங்கீ 119:73) கிரியை செய்கிறது (சங்கீ 19) அழகானவைகள் (உன் 5:14) பராக்கிரமம் செய்கின்றது (சங்கீ118:16) எகிப்துக்கு (பாவிகளுக்கு) வாதை கொடுக்கிறது (யாத் 9:3) பலத்த கரங்கள் (யோசு 4:23) பெலிஸ்தியருக்கு விரோதமானது (1 சாமு 7:13) ஒருமனப்படுத்துகிறது (2 நாளா 30:12) எஸ்றா மேலும், எஸ்றாவோடும் இருந்து நடத்தியது(எஸ்றா 7) எல்லாவற்றையும் செய்கிறது (யோபு 12:9) கர்த்தராகிய இயேசுவின் கரங்கள்: குஷ்டரோகியை தொட்டு சுகமாக்கினது, பிசாசுகளை துரத்தியது, காற்றையும் கடலையும் அடக்கியது. அற்புதங்கள் செய்தது. மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பியது. யூதாசையும் சினேகிதனே என்றழைத்து அணைத்தது. நமக்காய் ஆணிகளால் அடிக்கப்பட்டது. உயிரோடு எழுந்து, விண்ணகம் சென்றது. ஆளுகை செய்யும் கரமாய், நியாயத்தீர்ப்பு செய்யும் கரமாய் வரப்போகின்றது! இன்றும் கிருபையோடு இருக்கின்றது! அவர் கரங்களுக்குள் அடைக்கலம் புகுவோமா? அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (வெளி 5:7) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உம்முடைய கரங்கள் எங்கள் மீது நன்மையாக இருப்பதற்காக நன்றி! எங்கள் கரங்களால், உம்முடைய கரங்களைப் பிடித்துக் கொள்கிறோம்! இந்த மாதம் முழுவதும் உமது பரலோகப் பாதையில் நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment