= இன்றைய தியானம் = << இடறலின்றி நடப்போம் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இடறல்கள் அனைவரது வாழ்விலும் சாத்தியமே! எப்போது இடறல்கள் வரும் என அறியாதிருப்பதால், எப்போதுமே எச்சரிக்கை அவசியம். எனவேதான், விழிப்பான ஜெபம் அவசியம். சுய ஆசை, இச்சைகள் இடறவைக்கும்; பிறரின் வஞ்சகப்பேச்சுக்கள் இடறவைக்கும். இடறல்கள் வராதிருப்பது கூடாத காரியம், அது எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! கர்த்தர் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். கிருபையுள்ள தேவன் அவர். நம்மை இடறலுக்கு தப்புவிக்க விரும்புகிறார். நல்ல ஆலோசனைகளைத் தம் வேதவசனங்கள் மூலம் தந்து, ஞானமாய் வழி நடத்துகிறார். மெய்யான உபதேசங்களைவிட்டு வழிவிலகச்செய்யும், வயிற்றுக்கு ஊழியம் செய்யும் மனிதரை விட்டும் நாம் விலகியிருக்க அப். பவுல் அடிகளார் மூலம் வேண்டுகிறார். (ரோமர் 16:17). மூன்று வருடங்கள், கிறிஸ்துவோடு உண்டு, உறங்கி, ஊழியம் செய்த சீஷர்களுக்கே, அவர்கள் இடறலடையாதபடி வாழ, கர்த்தர் போதித்தார் என்றால், நமக்கு எவ்வளவு அதிகம்? வார்த்தை நமக்கு வழிகாட்டுவதாக! நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? ( சங்கீதம் 56:13) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உமக்கு ஸ்தோத்திரம். இடறலுக்கும், அதை உண்டாக்கும் அனைத்திற்கும் எங்களைத் தப்புவித்து, உம் வார்த்தைகளின்படி பரிசுத்தமாய், தூய ஆவியானவரின் துணையுடன் வாழ உதவி செய்யும். இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment