= இன்றைய தியானம் = << நற்செய்தி அறிவிப்போம் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! சுவிசேஷம் அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை மட்டுமல்ல, அது கிருபையும் கூட! சர்வ வல்லமையுள்ள தேவன், தாம் நினைத்தால், தமது தூதர்களில் சிலரை ஒவ்வொரு நாடுகளுக்கும் அனுப்பி, நற்செய்தி அறிவித்து, அனேக அற்புதங்களையோ, அல்லது வாதைகளையோ கொடுத்து, ஒரே நாளில், எல்லா ஜனங்களையும் மனந்திரும்ப வைக்க முடியும். ஆனால், அந்த நல்ல வேலைக்கு நம் ஒவ்வொருவரையும் நம்பி, ஏற்படுத்தியிருப்பாரானால், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்? அனைவரும் ஊழியம் செய்ய வாய்ப்பு உண்டு.. குடும்பமாய், குழுவாய் பிறருக்காக ஜெபிக்கலாம். எஸ்.எம்.எஸ். –மூலமாக வேத வசனங்கள் அனுப்பலாம். காணிக்கைகள் கொடுத்து தகுதியுள்ள ஊழியங்களைத் தாங்கலாம். சிறுவர், சிறுமியருக்கு கதைகள் மூலம் கிறிஸ்துவை அறிவிக்கலாம். படிக்கிற, வேலை செய்கிற இடங்களில் சாட்சியாக வாழ்ந்து கிறிஸ்துவை பறைசாற்றலாம். கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை பிறரிடம் அறிவிக்கலாம். இயலாதோர்க்கு உணவு, உடை கொடுத்து கர்த்தரின் அன்பை பகிரலாம். முயற்சிக்கலாமா? எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். (1 கொரி 9:22) ஆமென்! = ஜெபம் செய்வோம் = எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! கிருபையாய் நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற ஊழிய வாய்ப்புக்களுக்காக உமக்கு நன்றி! உயிருள்ளபோதே அவற்றைப் பயன்படுத்தி, ஆத்தும ஆதாயம் செய்ய ஞானத்தைத் தாரும். எங்களை அர்ப்பணிக்கிறோம். அன்பின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment