= இன்றைய தியானம் = << புதிதாக்குகிறார் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்த; ஆழத்தின்மேல் இருள் நிறைந்திருந்த பூமியின் மேல் கர்த்தரின் வார்த்தை புறப்பட்டபோது, அங்கே கர்த்தரின் வார்த்தையிலிருந்த வல்லமையால், சிருஷ்டிப்பு நிகழ்ந்த்து. பூமி ஒரு சிங்காரவனமாக, தோட்டமாக மாறிப்போனது. எந்த ஒரு நபரானாலும் அவரது வாழ்வு எந்த நிலையில் இருந்தாலும், அனைத்தையும் புதிதாக மாற்ற விரும்பும் கர்த்தரின் வார்த்தைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தால், நிச்சயம் புதிய வாழ்வு உண்டு! ஏமாற்றமான பழைய வாழ்வு; அசுத்தமான; ஒழுங்கற்ற; இருள் நிறைந்த பழைய வாழ்வு நொடிப்பொழுதில் மாறிடும்! இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. (2கொரிந்தியர் 5:17) என்று வாசிக்கிறோம். புதிதாக மாற விருப்பமா? கிறிஸ்துவுக்குள் வாருங்கள்! பழையது ஒழிந்து போகும். புது வாழ்வு மலரும்! முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். (ஏசாயா 43:18,19) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! எங்கள் பழைய வாழ்வை மாறுகிறவரே உம்மை துதிக்கிறோம்! புது பெலன் தாரும், புது வாழ்வைத் தாரும்! புதிய மனிதனாய், மனுஷியாய் மாற்றும்! பரிசுத்த ஆவியானவர் எங்களை செம்மையான வழியில் நடத்துவாராக! இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment