= இன்றைய தியானம் = << கர்த்தரின் சமூகம் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்றைய நாட்களில், கிறிஸ்தவர்களுக்கும், சபைகளுக்கும் விரோதமான செயல்கள் மிக அதிகம். கிறிஸ்துவை இரட்சகராக அறிந்து வாழ்கிற ஜனங்கள், பிறரால் படுகின்ற வேதனைகளும், சோதனைகளும் அதிகம். நாம் என்ன செய்யவேண்டும்? எஸ்தர் ராஜாத்திக்கு, யூதனாகிய மொர்தெகாய் ஆலோசனை சொன்னதுபோல, கர்த்தர் நமக்கு கற்பிப்பது என்ன? அது, நாம் கர்த்தரின் சமூகத்திற்கு செல்லவேண்டும்; கருத்தாய் ஜெபிக்கவேண்டும் என்பதே அது! ஆமான் மூலமாக, முழு யூதர்களின் உயிருக்கு ஆபத்து. எஸ்தர், தனக்கு கிடைத்த மேன்மை போதும் என்றிருந்தால், என்ன நடந்திருக்கும்? தன் உயிரைப் பொருட்படுத்தாமல், ராஜ சமூகம் சென்றதால், யூதா ஜனம் தப்பித்ததே! எதிரி ஆமான் தலை போயிற்றே! மொர்தெகாய் உயர்த்தப்பட்டாரே! வரவிருந்த தீமை நன்மையாய் மாறிற்றே! நம் வாழ்வில், குடும்பத்தில், வேலையில், ஊழியங்களில் எதிர்ப்பு மாற; தப்பிப் பிழைக்க; உயர்த்தப்பட; தீமை நன்மையாக மாற கர்த்தரின் சமூகம் சென்று ஜெபிப்போமா? நம் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர்! அல்லேலூயா! உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.(சங்கீதம் 91:7) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! எங்களைச் சுற்றிலும் இருக்கிற நெருக்கங்களிலிருந்து விடுதலை தருவதற்காக நன்றி! எங்களை, குடும்பங்களை; சபைகளை; ஊழியங்களை; வேலைகளை; உம் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். காத்துக்கொள்ளும்! உயர்த்தி ஆசீர்வதியும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment