= இன்றைய தியானம் = << மரணமே உன் கூர் எங்கே? >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மனிதன் ஒரேதரம் பிறப்பதும், ஒரேதரம் மரிப்பதும் இந்த பூமியில் நியமிக்கப்பட்ட ஒன்று. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்தார். உண்மைக் கிறிஸ்தவர்கள் பலர் இரத்தசாட்சியாக மரித்து, தங்களின் விசுவாசத்தை, மரணத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்! அவர்கள் "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" (பிலி 1:21) என வாழ்ந்து காட்டினார்கள். இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், மரணத்தை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் ருசிபார்த்தார்கள். அவர்களின் மனித வாழ்வின் முடிவுகள் எப்படியிருந்தது என்றால்… அப். மத்தியா : யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர் கற்களால் எறியுண்டு பிறகு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். அப்.யோவான் : வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே! அப்.ததேயு : பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார். அப். தோமா : இந்தியாவிலுள்ள சென்னைப் பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். அப்.சீமோன் : இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில் இரத்த சாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர். அப். பற்தொலொமேயு: அர்மேனியாவில் உள்ள அல்லானும் என்றும் பட்டணத்தில் சவுக்கால் அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். அப்.பிலிப்பு : டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். அப்.அந்திரேயா: அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு X வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். செபதேயுவின் குமாரனாகிய அப். யாக்கோபு பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1-ம் மன்னானால் ஏறக்குறைய கி.பி. 44-வது ஆண்டு சிரைச்சேதம் பண்ணப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். அல்பேயுவின் குமாரனான அப். யாக்கோபு தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு பிறகு கற்களால் எறியுண்டு இரத்தசாட்தியாய் மரித்தார். அப்.சீமோன் பேதுரு ரோம மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சி மரித்தார் இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதியில்லை,அதனால் என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள் வேண்டிக்கொண்டார். அப்படியே அறைந்தார்கள். அப்போஸ்தலனாகிய மத்தேயுவை எத்தியோப்பியாவில் சிறையாக்கி, அங்கே தரையோடு சேர்ந்து ஆணி அடித்தனர். அதன் பிறகு தலை வெட்டபட்டு இரத்தசாட்சியாய் மரித்தார். மரணத்தின் கூர் இன்றும்கூட உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது! அல்லேலூயா! நாம் இரத்தம் சிந்தி, இரத்தசாட்சியாக மாறுமளவு, கர்த்தர் நம்மைக் கைவிடவில்லை. அவர் நமக்காய் சிந்தின இரத்தத்துக்காவது மதிப்புகொடுத்து, பரிசுத்த சாட்சியாகவாவது வாழ முயற்சி செய்யலாமே! ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உம்முடைய அன்புக்காக நன்றி! குமாரனாகிய கர்த்தர் இயேசு சிந்தின இரத்தத்துக்காக நன்றி! பரிசுத்தமாக வாழ்ந்து, கர்த்தரின் தியாகத்தை, மதிக்க உதவிசெய்யும்! உணர்வுள்ள இருதயம் தாரும்! நீரே எங்கள் ஜீவன்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment