= இன்றைய தியானம் = << அடிக்கும் மருத்துவர் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! தாயின் வயிற்றிலிருந்து வெளியேவந்த சிறிது நேரத்தில், பிறந்த குழந்தை அழவேண்டும். இல்லையென்றால் ஜீவன் இல்லையென்று பொருள். அப்படி அழவில்லையென்றால், அனைவரும் சற்று அதிர்ந்துவிடுவார்கள்! மருத்துவர் வந்து சோதிப்பார். பிறகு அந்தக் குழந்தையை தலைகீழாகப் பிடித்து முதுகில் சுளீரென்று ஒரு அடி கொடுப்பார். உடனே குழந்தை வீர் வீரென கத்தி அழ ஆரம்பிக்கும். பிறகுதான் அனைவருக்கும் சந்தோஷம்! குழந்தையை ஆவலோடு பற்றி அணைத்து மகிழுவார்கள்! ஆம் செயல்படாத சரீரம் வீண்தான். ஆவிக்குரிய பிறப்பிற்குப் பின்னால், நாம் செயல்படவேண்டும்! வேதம் வாசித்து, தியானித்து, ஆராதித்து, இயன்ற ஊழியம் செய்து என எப்படியாவது செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்! இல்லையேன்றால், நம் முதுகில், ஒரு அதிர்ச்சியான, ஒரு சிறு அடி நிச்சயம் உண்டு! ஏனென்றால், நாம் கர்த்தரின் நேசத்துக்குரிய பிள்ளைகள்! கர்த்தர் கொடுக்கும் வேறோர் அடியும் உண்டு! அதை வாங்கினால், யார் அடித்து என்று திரும்பிப் பார்க்க நமக்கு உயிர் இருக்காது! நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.(வெளி 3:19) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! அடித்து, செயல்படவைக்கிறவரே! உமக்கு ஸ்தோத்திரம்! உம் அன்பை உணர்ந்து, உமக்கென்று செயல்பட எங்களை ஒப்புக்கொடுக்கிறோம்! எங்களைப் பண்படுத்தி, பயன்படுத்தும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment