= இன்றைய தியானம் = << சிங்கத்தைப் போல >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! காட்டு மிருகங்களில் சிங்கம் ஒன்றுக்கும் பின்னிடையாது என்று நீதி 30:30 ல் வாசிக்கிறோம். நாம் கூட அப்படியிருக்கவேண்டும் என நம் கர்த்தரும் விரும்புகிறார். சிங்கம் ஒன்றுக்கும் பின்னிடையாது என்றால், வேறு எந்த மிருகமும் அதற்கு முன்பாக நிற்காது என்று அர்த்தமாகும். பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம் போல வேஷமிடுகிறவன். மிதித்திடுவோம் இயேசுவின் நாமத்தில்! நம் ஆண்டவர் இயேசுவோ, யூதா கோத்திரத்துச் சிங்கமாய் கெர்ச்சிக்கிறவர். நாம் அவர் பிள்ளைகள் அல்லவா? நாம் எந்த ஒரு காரியத்திலும் பின்னிடையாதபடி மிகுந்த தைரியத்தோடு முன் நடப்போம்! கர்த்தர் நம்மோடு வருகிறார். "உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு இருக்கிறேன்" என்று வாக்களித்தவர், நம்மோடுதான் இப்போதும் இருக்கிறார். அவரோடு சேர்ந்து நடந்தால், வெற்றி நமதே! எதிலும்! அல்லேலூயா! அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.(வெளி 5:5) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! யூதா கோத்திரத்து சிங்கம் போல தைரியத்தையும் பலத்தையும் எங்களுக்கு இன்று தாரும்! எதற்கும் பின்னிடையாத வெற்றி வாழ்வைத் தாரும்! மகிமை உமக்கே! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment