= இன்றைய தியானம் = << கொஞ்சத்திலா உண்மை? >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஒரு சிலர் இப்படியும் புரிந்துகொள்வதுண்டு. நாம் எல்லாவற்றிலும் உண்மையாயிருக்க வேண்டியதில்லை. நம்மால் முடிந்தவரை ஏதோ சில காரியங்களில் உண்மையாக நடந்தால் போதும். லூக்கா 19-ல் கர்த்தர் சொன்னது என்ன? அந்த உவமையில், அந்த எஜமான் குறிப்பிட்ட வேலைகளை ஒருசிலருக்கு பகிர்ந்து கொடுத்தார் எனக்கொண்டால், பெரிய வேலை, சிறிய வேலை என்று பாராமல், எல்லாவற்றிலும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே அந்த எஜமானின் எதிர்பார்ப்பு! மோசே போன்ற நீதிமான்கள், தவறு செய்தாலும், இந்த பூமியில் சரிக்கட்டப்படுமே! "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி போல, நாம் செய்யும் காரியங்களில், ஏதேனும் கொஞ்சத்தை எடுத்து, கர்த்தர் நம்மை சோதித்துப் பார்க்க நேர்ந்தாலும், அதில் உண்மை காணப்படவேண்டும்! உண்மையுள்ள மனுஷனே பரிபூரண ஆசீர்வாதங்கள் பெறமுடியும்! எனவே, முடிந்தவரை அல்ல ஆயுள் முடியும் வரை உண்மை தேவை! நாம் உண்மை தெய்வத்தை வணங்கிக்கொண்டிருக்கிறோம்! அவரும் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கிறார்! தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.(யோவான் 4:24) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உமக்கு மகிமை! பொய் நாவுகளை; பொய்யான இருதயத்தை எங்களுக்கு தூரப்படுத்தும். மெய்வழி நடக்கும்படி, பாதைகாட்டி வழி நடத்தும்! பொய்யனும், பொய்க்குப் பிதாவுமான சாத்தானின் சகல தந்திரங்களையும் ஜெயித்து வாழ உதவும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment