இன்றைய தியானம் << என் ஆலயமே! >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இஸ்ரவேலர்கள் தங்கள் வாழ்வில், எருசலேமிலுள்ள ஆலயத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். எருசலேமே (தேவனுடைய ஆலயத்தை) நான் உன்னை மறந்தால், என் வலது கை சூம்பிப் போவதாக என்று மூலமொழியில் உள்ளது. "நான் கர்த்தரின் ஆலயத்தை மறந்தால், எனக்கு இந்த வாழ்வே வேண்டாம்" என்பதே வைராக்கியமுள்ள இஸ்ரவேலரின் கருத்து. கர்த்தரும் அப்படியே தமது மகிமைபொருந்திய ஆலயத்தின்மீது மிகுந்த வைராக்கியத்தோடே இருக்கிறார். இன்றைக்கு ஆலயத்தைக் கெடுக்கும் கூட்டத்தினர் அதிகம். பணம்; பதவிகள்; பகட்டு என ஆலயத்திற்கு ஆலயம் வித்தியாசமின்றி, அருவருப்பான சாத்தான் கூட்டத்தினர் உண்டு! ஆபாசமான உடைகள், பிறரை மயக்கும் நடைகள், நளினமான பேச்சுக்கள் என தாராளமாய்! ஆலயத்தைப் பாழாக்கும் அருவருப்புக்கள், அவிசுவாசிகளின் வடிவிலே! ஆனால், சபைகளில் உண்மையாய் ஜெபித்திடும்; உண்மையாய் உழைத்திடும் விசுவாசிகளும் உண்டு! அவைகளைக் கர்த்தர் காண்கிறார்! கர்த்தராகிய இயேசு சபையின் தலையன்றோ! சரீரமாகிய நாம் சரியாக இருந்தால், நம் வாழ்வும் நேர்த்தியாக இருக்கும் என்பது உண்மை! கடமைக்காக அல்ல, கருத்துடனே ஜெபிப்போம்; உழைப்போம் நாம் சார்ந்திருக்கும் ஆலயத்துக்காக! அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். (வெளி 21:22) ஆமென்! இன்றைய ஜெபம் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்! |
0 comments:
Post a Comment