மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (யோபு 7: 17,18) நான் எம்மாத்திரம்? 1) நான் – (ஒருவன் / ஒருத்தி) 2) என் குடும்பம் – சுமார் 7 பேர் 3) என் உறவுகள் – சுமார் 500 பேர் 4) தெரு – சுமார் 2000 பேர் 5) ஊர் – சுமார் 1,00,000 பேர் 6) மாவட்டம் – சுமார் 20,00,000 பேர் 7) மாநிலம் – சுமார் 4,00,00,000 பேர் 8) நாடு – சுமார் 120,00,00,000 பேர் 9) கண்டம் - சுமார் 350,00,00,000 பேர் 10) பூமி (கிரகம்) – சுமார் 850,00,00,000 பேர் 11) சூரியக் குடும்பம் (சூரியன், சந்திரன் ,கிரகங்கள்) 12) பால்வெளி – கணக்கில்லாத நட்சத்திரக் கூட்டங்கள், நாம் அறிந்திராத வேறு சூரியக் குடும்பங்கள் (Milky way) …. இன்னும் பல… 13) நமக்கு முன்பாக இறந்தவர்கள், இன்னும் பிறக்கப்போகிறவர்கள்… 14) முடிவாக இவை எல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்யும் சிருஷ்டி கர்த்தா! இப்படி எல்லாவற்றையும் கணக்கிட்டால், ஒரு பொருட்டாய் எண்ணப்படுவதற்கு அந்த "நான்" என்கிற விஷயம் எம்மாத்திரம்? ஆனால், கர்த்தர் குறிப்பாக நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்து நேசிக்கிறார் என்றால், நாம் அவருக்கு எவ்வளவு பாத்திரவான்களாய், பரிசுத்தமாய் நடந்துகொள்ளவேண்டும்? மாயையான வாழ்வை, மகிமையான கர்த்தரின் கரங்களில் ஒப்புக்கொடுப்போமா? மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; (சங்கீதம் 144:4) கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? – தாவீது ராஜா (2சாமு 7:18) ஆமென்! |
0 comments:
Post a Comment