இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:13,14)
நாம் அனைவரும் செல்ல விரும்புவது பரலோகம்தான். ஆனால் செல்லவேண்டிய பாதை நரகம் போலத்தான் இருக்கும். ஆனால் நரகம் அல்ல! கிறிஸ்து இயேசுவின் துணையோடு நடக்கிறேன் என்ற உணர்வோடு நடந்தால்; கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற உணர்வடைந்தால் இவ்வுலக வாழ்வும்கூட அனேக போராட்டங்களின் நடுவிலும் பரலோகம் போலவே இருக்கும். இவ்வுலகில் தேவ பக்தியாய் நடக்க விரும்புகிறவர்கள் துன்பப்படுவார்கள்! இடுக்கமான வாசல் என்ற வழியானது இறைவன் இயேசுவே! பாவங்களையும், இச்சைகளையும் விட்டு விலக விரும்பாதவர்களுக்கே அவர் இடுக்கமான வழி! ஆனால், துன்பப்பட்டாலும் சரி என பக்தியோடு இருப்பவர்களுக்கோ அவர் இன்பமான வழி! அல்லேலூயா! சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்(அப்போஸ்தலர் 14:22) ஆமென்! |
0 comments:
Post a Comment