21 Jun 2013

22.06.2013 (சனி) < யாரைப்போல்? >

LORD JESUS CHRIST : "My grace is sufficient for thee" (2 Cor 12:9)

 WORD OF LORD

<<<   DAILY DEVOTION BY GRACE INDIA MINISTRIES  >>>

22.06.2013 (சனி)

< யாரைப்போல்? >

இன்றைய சிந்தனைக்கு >

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:48)

இன்றைய சங்கீதப் பகுதி >

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.(89:8)

இன்றைய நீதிமொழி >

ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.(28:1)

இன்றைய தியானம் >

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆபிரகாம் என்றால் விசுவாசம்! பவுல் என்றால் ஊழியம்! தாவீது என்றால் வீரமும்; சங்கீதங்களும், சிம்சோன் என்றால் பலமும், யோபு என்றால் பொறுமையும், மோசே என்றால் இஸ்ரவேலரை வழி நடத்திய விதமும், நம் நினைவுக்கு வருகிறதே, பிறர் நம்மை நினைத்தால், அவர்களுக்கு என்ன ஞாபகம் வரும்? நமது முட்டாள்தனமான பேச்சா? நமது பொய்களா? நாம் ஏமாற்றிய கதைகளா? திருட்டுத்தனங்களா? நமது கவலைமிக்க முகமா? போதும்! நாம் நம்மைப்பிறர் நினைக்கும்போது கர்த்தரை நினைவுகூறும்படி செய்யவேண்டும்! அவர் பூரண சற்குணர்! மேலே படித்த தேவ பக்தர்களைப்போல நமக்கு விசுவாசம், ஊழியம், பலம், பொறுமை, அன்பு, சகிப்புத்தன்மை ஆகியன இருந்தால், நம்மை நினைக்கிறவர்கள், நம் கர்த்தரையல்லவா நினைவுகூர்வார்கள்? அதுதான் நமக்கு உண்மையான ஆசீர்வாதம்! நாம் மாறுவோம் கிறிஸ்துவின் குணதிசயங்களுக்கு!

கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். (1 பேதுரு 2:21) ஆமென்!

இன்றைய ஜெபம் >

அன்பின் பரலோகப் பிதாவே!  உம் வார்த்தைகளுக்கு நன்றி! எங்களை நினைவுகூறும் தகப்பனே! பிறர் கண்களுக்கு நாங்களும் ஓர் கிறிஸ்துவாக இருக்கும்படி, எங்கள் குணாதிசயங்களை மாற்றும்! அவரது அடிச்சுவடுகளில் நடக்க உதவிசெய்யும்!

சர்வவல்லவர்  இயேசு கிறிஸ்துவின்  பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே!  ஆமென்.

உங்கள் கவனத்திற்கு >

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு

கிருபையும் சமாதானமும் உண்டாவதாக!

"கர்த்தரின் வார்த்தை"  (WORD of LORD)  தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்!  ஆமென்!

Visit Our WebPage: http://graceword.wix.com/tamil

Visit Our Blog: http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

கர்த்தரின் பணியில்

GRACE INDIA MINIStRIES

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

0 comments:

Post a Comment