LORD JESUS CHRIST : "My grace is sufficient for thee" (2 Cor 12:9)
WORD OF LORD
<<< DAILY DEVOTION BY GRACE INDIA MINISTRIES >>>
21.06.2013 (வெள்ளி)
< கீழ்ப்படிதல் >
இன்றைய சிந்தனைக்கு >
அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் (இயேசு) எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். (மத்தேயு 8:27)
இன்றைய சங்கீதப் பகுதி >
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். (8:6)
இன்றைய நீதிமொழி >
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். (1:30)
இன்றைய தியானம் >
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! உயிரற்ற, காற்றும், கடலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிகின்றன! கர்த்தர் இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, தண்ணீரை ஜாடிகளில் ஊற்றினபோது, திராட்சரசம் கிடைத்தது; லாசருவின் கல்லறையை மூடியிருந்த கல் தள்ளப்பட்டபோது, லாசருக்கு உயிர் கிடைத்தது. பார்வையற்ற ஒருவர், சீலோவாம் குளம் சென்று கண்களைக் கழுவியபோது பார்வை கிடைத்தது; சகேயு மரத்திலிருந்து இறங்கிவந்ததால், அவர் வீட்டுக்கு இரட்சிப்பு உண்டானது! நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போம்! அதிசயம் காண்போம்!
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். (யாக்கோபு 4:7) ஆமென்!
இன்றைய ஜெபம் >
அன்பின் பரலோகப் பிதாவே! உம் வார்த்தைகளுக்கு நன்றி! எங்களுக்கு, உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் இருதயம் தாரும்! அற்புதங்கள் காண உதவிசெய்யும்!
சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.
உங்கள் கவனத்திற்கு >
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக!
"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.
ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!
Visit Our WebPage: http://graceword.wix.com/tamil
Visit Our Blog: http://graceindiaministries.blogspot.in/
E-Mail ID : graceindiaministries@gmail.com
Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/
கர்த்தரின் பணியில்
GRACE INDIA MINIStRIES
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
0 comments:
Post a Comment