கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 11:15)
<< இன்றைய தியானம் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்கும் போது காதுகளோடுதான் பிறக்கிறோம் என்பது கண்கூடான உண்மை! பிறகு, நம் இரட்சகர் இயேசு ஏன் "கேட்கிறதற்கு காதுள்ளவன்" கேட்கக்கடவன் என சொல்லியிருக்கிறார்? மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை இது போன்ற 16 வசனங்கள் உண்டு! அர்த்தமில்லாமல் ஆவியானவர் எழுதிவைக்கவில்லை! ஆம் "கீழ்ப்படியும் இருதயத்தையே" கேட்கிற காது குறிக்கிறது! கீழ்ப்படிய மனதுள்ளவன் கேட்கக்கடவன் என்றே கர்த்தர் குறிப்பிடுகிறார். அவர் அப்படிச்சொல்லக் காரணங்கள் உண்டு! பல வருடங்களுக்கு முன்பு கர்த்தரின் வார்த்தைகளை நாம் கேட்பது அரிது. ஞாயிறு ஆராதனைகள் தவிர, விஷ்வவாணி வானொலி, இலங்கை வானொலி போன்ற குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கேட்க முடியும். ஆனால், தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாட்களிலோ, எஸ்.எம்.எஸ்., ஈமெயில், இன்டர்னெட்,பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், மற்றும் அனேக ஆவிக்குரிய கூட்டங்கள், அனேக தொலைக்காட்சி சேனல்கள், பலதரப்பட்ட ஊழியங்கள் மூலம் வினாடிக்கு வினாடி நம்மால் கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்க முடிகிறது. ஆனால் எத்தனைபேர் கீழ்ப்படிகிறோம்? கடைசி காலத்தில் அவர் வார்த்தைகளே நம்மை நியாயந்தீர்க்கப்போகிறது. உலக வாழ்வோடு ஒன்றித்துப்போனவர்கள், கண்கள் இருந்தும் குருடர்களே! காதுகள் இருந்தும் செவிடர்களே! கால்கள் இருந்தும் முடவர்களே! ஏனென்றால் எங்கேயெல்லாம் எச்சரிக்கும் வாசகங்கள் உள்ளதோ அதையெல்லாம் மீறுவதே உலக; மனித இயல்பு! "குடி குடியைக் கெடுக்கும்" புகைபிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு" கிட்னி கெடும் நுரையீரல் கெடும் என்று எத்தனை முறை கேட்டாலும் மனதில் உறைப்பதில்லை! நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தபட்சம் 3 வேதாகமங்களாவது உண்டு! எத்தனைபேர் படிக்கிறோம்? தியானிக்கிறோம்? அதனால்தான் கர்த்தர் சொல்லியிருக்கிறார்! "கீழ்ப்படிய வேண்டும் என்ற சிந்தையோடு கேளுங்கள்! மற்றவர்களுக்கு எவ்வளவு கேட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை" எனென்றால் அவர்கள் எவ்வளவு ஊதினாலும் கேட்காத "செவிட்டு விரியன்கள்" "..தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். (லூக்கா 11:28) ஆமென்!
<< இன்றைய ஜெபம்! >> |
0 comments:
Post a Comment