26 Jun 2013

27th June 2013 <<கலங்காதீர்கள் >>

GRACE & PEACE OF JESUS BE WITH YOU!
Having trouble viewing this email? READ HERE
please add wordoflordtamil@gmail.com to your email address book.
WORD of  LORD
DAILY DEVOTION FOR ETERNAL LIFE
<< GRACE INDIA MINISTRIES >>

27th June 2013 (வியாழன்)
இன்றைய வார்த்தை

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (யோவான் 14:1)

இன்றைய சங்கீதப் பகுதி

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். (42:11)

இன்றைய நீதிமொழி

ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். (10:15)
 
இன்றைய தியானம்

கலங்காதீர்கள்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆவிக்குரிய வாழ்வில் அனேக கலக்கங்கள் உண்டு! ஆனால் அவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவர் இயேசு நம்மோடு உண்டு! நாம் உண்மையாய் கர்த்தரின் வார்த்தைகளில் நிலைத்திருக்க முயற்சிக்கும்போது, உலகத்தாலும், சாத்தானாலும், சூழ்நிலைகளாலும் சிக்கவேண்டிவரும்! தடைகளைத்தாண்டவேண்டியிருக்கும்! தடைகளைத் தகர்க்கும் தகப்பன் நமக்குமுன்பாகச் செல்லுகிறார்!

ஆவிக்குரிய வறுமை கலக்கங்களைக் கொண்டுவரும்! கர்த்தரின் வார்த்தைகளைத் தியானித்து அவரில் நிலைத்திருந்தால் கலக்கமோ, கவலையோ நமக்கில்லையே!

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8:17)

ஆமென்!

இன்றைய ஜெபம்

எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! உமது நல்வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்! கலக்கங்களிலிருந்து விடுவிக்கிறவரே! எங்களைக் காத்துக்கொள்ளும்! விசுவாசத்தில் வர்த்திக்கப்பண்ணும்! எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!
 
உங்கள் கவனத்திற்கு

"கர்த்தரின் வார்த்தை"  (WORD of LORD)  தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

GRACE INDIA MINIStRIES

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

GRACE India Ministries | #175, 9th street, VGV Garden, | Kangeyam Road, | Tirupur | Tamil Nadu | India | 641606
To Unsubscribe click here! 



--
Posted By GRACE india ministries to WORD of LORD on 6/26/2013 12:38:00 am

0 comments:

Post a Comment