இன்றைய தியானம்
எது மகிமை?
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆண்டவராகிய இயேசு தான் மகிமைப்படப்போகிற வேளை எனக்குறிப்பிடுவது, தான் தேவனுடைய குமாரன் என எல்லோரும் அறிந்துகொள்ளும் நேரம் என சொல்லவில்லை! அல்லது தேவனைத் துதிக்கும் வேளை எனவும் சொல்லவில்லை! மாறாக தன் பிதாவின் சித்தத்தின்படி பாடனுபவித்து மரணத்தின் ஊடாக செல்லப்போவதையே சொன்னார்! இயேசு கிறிஸ்துவின் பார்வையில் பிதாவின் விருப்பத்தின்படி பாடுகளை அனுபவித்து அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வேளையே தனது உண்மையான மகிமை என நம்மை உணரவைக்கிறார். சில சமயம் நாம் படுகிற பாடுகள்கூட, அவைகளைக் கிறிஸ்துவின்பொருட்டு சகித்துக்கொண்டால், அது பிதாவுக்கு நாம் செலுத்தும் மகிமையே ஆகும்!
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8:17)
ஆமென்!
இன்றைய ஜெபம்
எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! உமது நல்வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்! நாங்கள் படுகிற சிலபாடுகள்கூட உமக்கு மகிமையாக இருப்பதை உணர்ந்து உம்மைத் துதிக்கிறோம்! எங்கள் வாழ்வு கிறிஸ்துவைப்போல உமது சித்தத்தை செய்வதாகவே இருக்கட்டும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்! |
0 comments:
Post a Comment