இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்;(யோவான் 6:11) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதத்தில் ஒரு முறை கூட "அல்லேலூயா" என்று சொல்லவில்லை! ஆனால் "ஸ்தோத்திரம்" என பல முறை சொன்னார். கர்த்தரைத் துதிக்கும் அனேகர், நன்றி செலுத்தவும் தவறாதிருக்கும்படி கர்த்தர் நமக்கு கற்றுதருகிறார். நாம் அனேக தேவைகளின் மத்தியில் இருப்போம். இந்த சூழ்நிலையில் எதைச் செய்வது என கையைப் பிசைந்துகொண்டிருப்போம்.அனைத்தையும் திருப்தியடையும்படி பெற்றுகொள்ள வேண்டுமா? மேற்கண்ட வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் செலுத்தியதால் என்னவெல்லாம் நடந்தன என்று பார்க்கலாமா? 1) ஏறக்குறைய 5000 பேருக்கு வேண்டியமட்டும் உணவு கிடைத்தது. 2) அனைவரும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள். 3) 12 கூடை உணவை மீதம் எடுத்தார்கள். எனவே, கையிலிருக்கும் கொஞ்சத்துக்காக கர்த்தருக்கு, விசுவாசத்தோடு "ஸ்தோத்திரம்" செலுத்திப் பாருங்கள்! தேவைகள் சந்திக்கப்படும்; திருப்தியடைவோம்; மீதம் எடுப்போம்! அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.(சங்கீதம் 147:14) எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.(1 தெச 5:18) ஆமென்! |
0 comments:
Post a Comment