ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.(சங்கீதம் 15:4) கர்த்தாவே, யார் உமது கூடாரத்தில் தங்குவார்? யார் உமது பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவார்? என்ற கேள்விக்கான பதில்களில் ஒரு பதில்தான் தனக்கு நஷ்டம் வந்தாலும், ஆணையிட்டதில் தவறாமல் இருப்பவர்! தான் வாக்குக்கொடுத்தது மனிதருக்கோ அல்லது கர்த்தருக்கோ தன் வார்த்தையில் தவறாதிருப்பவர்களே கர்த்தருக்கு உகந்தவர்கள்! சில சமயங்களில் "நான் உனக்கு உதவி செய்கிறேன் என்றோ, குறிப்பிட்ட நாளில் சரியானபடி தருவேன் அல்லது செய்வேன் என்றோ, நாம் சிலருக்கு சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதற்கு முயலும்போது சில நஷ்டங்கள் வரலாம், இழப்புக்கள் வரலாம். நம் உறவுகள் தடையாக இருக்கலாம், ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் வார்த்தையின்படி சொல்தவறாத பூரண புருஷர்களாக இருக்கவேண்டும்! சிலர் கர்த்தரிடம் பொருத்தனை செய்திருப்போம்! அப்படி ஊழியம் செய்வேன், இப்படி ஊழியம் செய்வேன் என ஏதோ ஒன்று! இழப்புக்கள் வந்தபோது, ஓடி ஒளிந்துவிடுவோம். அப்படியல்ல, கர்த்தருக்காக எதையாகிலும் இழந்தாலும் பரவாயில்லை என வைராக்கியம் கொள்ள கர்த்தர் நமக்கு உதவி செய்யட்டும்!
கர்த்தரிடம் பொருத்தனை செய்த யெப்தா தன் மகளை பலியிட்டார்! (நியா 11:39) பொருத்தனைக்காக யெப்தா இழந்தது பணமோ, பொருளோ அல்ல தன் மகளை! அப்படிப்பட்ட மனிதரும் இதே பூமியில் சொல் தவறாமல் வாழ்ந்திருக்கிறார்கள்! நம்மால் இயன்றவரை வார்த்தையின்படி வழி நடக்க கர்த்தரே நமக்கு உதவி செய்வாராக! பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.(எபி 11:32) ஆமென்! |
0 comments:
Post a Comment