…உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.(யாக்கோபு 4:4) ஒரு அப்பாவும், 5 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் ஏதோ சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. திடீரென வந்த அதீத கோபத்தில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது கையிலிருந்த ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட கை சீக்கிரம் சரியாயிடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் "ஐ லவ் யூ அப்பா" என இருந்தது. ஆம்! உலக சிநேகம் எப்போதும் பிறருக்கு ஆபத்தையே ஏற்படுத்துகின்றது. மேலும், அது நாம் பரலோக வாழ்வை பெற்றுக்கொள்ளாதபடி தடுத்துவிடுகிறது. பல சமயங்களில் உலக சிநேகம் நம் கண்களை மறைத்துவிடுகிறது. புத்தியை மழுக்கிவிடுகிறது. அதை ஜெபித்து ஜெயிக்காவிடில், பேராபத்து நமக்கு காத்திருக்கிறது! மனிதரோ, பொருளோ அதன் மேல் நாம் வைக்கும் எப்பேர்ப்பட்ட உலக ஆசையும் கர்த்தருக்கு விரோதமான பகையே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடையவைகளுக்காக அல்ல, நமக்காகவே தம் உயிர் கொடுத்தவர்! நம் சிநேகம் கர்த்தர்மேலும், அவர் வார்த்தையின்மேலும் இருப்பதாக! அதுவே பரலோக வாழ்வுக்கு வழி! உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.(1 யோவான் 2:15) ஆமென்! |
0 comments:
Post a Comment