இன்றைய தியானம் << நம் சினேகிதர் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! உலகத்தில் சினேகிதரில்லாதோர் யாருமில்லை எனலாம். மகிழ்ச்சியில் மட்டுமல்ல துக்கத்திலும் பங்கெடுப்பதே நல்ல நட்பு! தாவீதுக்கு யோனத்தான் போல! நல்ல நண்பர்கள் இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்! சர்வ்வல்லமையுள்ள கர்த்தர், தான் மகாபெரியவராக இருந்தாலும், மனிதர் ஒவ்வொருவரோடும் நட்பு பாராட்டி, ஒரு சினேகிதனாக இருக்கவிரும்புகிறார்! மோசேக்கு அவர் சினேகிதர்; ஆபிரகாம் ஐயாவுக்கு அவர் சினேகிதர்! கர்த்தர் இயேசு கிறிஸ்து, தம் சீஷர்களுக்கு சினேகிதர்! தம் இரகசியங்களை நம்மோடு பகிர, நம் துன்ப; துக்கத்தில் பங்கெடுத்து, அதை மாற்றிபோட, இயேசு நம்மோடு நண்பராக இருக்கவிரும்புகிறார்! நாம் தயாரா? இருதயம் சுத்தமாயிருப்பதே அதற்கான தகுதி! கர்த்தர் இயேசுவே என் உற்ற நண்பர் என உரக்க சொல்லலாமா? இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். (யோவான் 15:15) ஆமென்! இன்றைய ஜெபம் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! எங்கள் நண்பராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி! வேதத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும்! அதன்படி வாழ பெலன் தாரும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்! |
0 comments:
Post a Comment