28 Jun 2013

29th June 2013 << என் ஆலயமே! >>

MAY GRACE & PEACE OF OUR LORD JESUS CHRIST FILL US TODAY!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

TO WALK WITH GOD TODAY & EVER…

<< GRACE INDIA MINISTRIES >>

Today                                   29th June 2013 (சனி)

இன்றைய வார்த்தை

 

எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. (சங்கீதம்137:5)

 

இன்றைய சங்கீதப் பகுதி

 

கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். (26:8)

 

இன்றைய நீதிமொழி

 

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். (3:33)

 

இன்றைய தியானம்

 

<< என் ஆலயமே! >>

 

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!  இஸ்ரவேலர்கள் தங்கள் வாழ்வில், எருசலேமிலுள்ள ஆலயத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். எருசலேமே (தேவனுடைய ஆலயத்தை) நான் உன்னை மறந்தால், என் வலது கை சூம்பிப் போவதாக என்று மூலமொழியில் உள்ளது. "நான் கர்த்தரின் ஆலயத்தை மறந்தால், எனக்கு இந்த வாழ்வே வேண்டாம்" என்பதே வைராக்கியமுள்ள இஸ்ரவேலரின் கருத்து. கர்த்தரும் அப்படியே தமது மகிமைபொருந்திய ஆலயத்தின்மீது மிகுந்த வைராக்கியத்தோடே இருக்கிறார்.

 

இன்றைக்கு ஆலயத்தைக் கெடுக்கும் கூட்டத்தினர் அதிகம். பணம்; பதவிகள்; பகட்டு என ஆலயத்திற்கு ஆலயம் வித்தியாசமின்றி, அருவருப்பான சாத்தான் கூட்டத்தினர் உண்டு! ஆபாசமான உடைகள், பிறரை மயக்கும் நடைகள், நளினமான பேச்சுக்கள் என தாராளமாய்! ஆலயத்தைப் பாழாக்கும் அருவருப்புக்கள், அவிசுவாசிகளின் வடிவிலே! ஆனால், சபைகளில் உண்மையாய் ஜெபித்திடும்; உண்மையாய் உழைத்திடும் விசுவாசிகளும் உண்டு! அவைகளைக் கர்த்தர் காண்கிறார்! கர்த்தராகிய இயேசு சபையின் தலையன்றோ! சரீரமாகிய நாம் சரியாக இருந்தால், நம் வாழ்வும் நேர்த்தியாக இருக்கும் என்பது உண்மை! கடமைக்காக அல்ல, கருத்துடனே ஜெபிப்போம்; உழைப்போம் நாம் சார்ந்திருக்கும் ஆலயத்துக்காக!

 

அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். (வெளி 21:22)  ஆமென்!

 

இன்றைய ஜெபம்

 

எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே!   மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!

 

உங்கள் கவனத்திற்கு

 

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

 

Our Blog: http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE India Ministries, +91 9952427477, +91 9994599677, +91 99940 16570

To Unsubscribe click here! 

 

 

27 Jun 2013

28th June 2013 << நம் சினேகிதர் >>

MAY GRACE & PEACE OF JESUS CHRIST FILL US RIGHT NOW!

Having trouble viewing this email? READ HERE. Please add wordoflordtamil@gmail.com to your email address book.

WORD of  LORD

DAILY DEVOTION FOR ETERNAL LIFE

<< GRACE INDIA MINISTRIES >>

28th June 2013 (வெள்ளி)

இன்றைய வார்த்தை

 

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; (யாத் 33:11)

 

இன்றைய சங்கீதப் பகுதி

 

என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். (38:11)

 

இன்றைய நீதிமொழி

 

சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான் (22:11)

 

இன்றைய தியானம்

 

<< நம் சினேகிதர் >>

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! உலகத்தில் சினேகிதரில்லாதோர் யாருமில்லை எனலாம். மகிழ்ச்சியில் மட்டுமல்ல துக்கத்திலும் பங்கெடுப்பதே நல்ல நட்பு! தாவீதுக்கு யோனத்தான் போல! நல்ல நண்பர்கள் இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்! சர்வ்வல்லமையுள்ள கர்த்தர், தான் மகாபெரியவராக இருந்தாலும், மனிதர் ஒவ்வொருவரோடும் நட்பு பாராட்டி, ஒரு சினேகிதனாக இருக்கவிரும்புகிறார்! மோசேக்கு அவர் சினேகிதர்; ஆபிரகாம் ஐயாவுக்கு அவர் சினேகிதர்! கர்த்தர் இயேசு கிறிஸ்து, தம் சீஷர்களுக்கு சினேகிதர்! தம் இரகசியங்களை நம்மோடு பகிர, நம் துன்ப; துக்கத்தில் பங்கெடுத்து, அதை மாற்றிபோட, இயேசு நம்மோடு நண்பராக இருக்கவிரும்புகிறார்! நாம் தயாரா? இருதயம் சுத்தமாயிருப்பதே அதற்கான தகுதி! கர்த்தர் இயேசுவே என் உற்ற நண்பர் என உரக்க சொல்லலாமா?

 

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். (யோவான் 15:15)

 

ஆமென்!

 

இன்றைய ஜெபம்

 

எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! எங்கள் நண்பராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி! வேதத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும்! அதன்படி வாழ பெலன் தாரும்!  மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!

 

உங்கள் கவனத்திற்கு

"கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து, பிறர் தியானிக்கச் செய்யுங்கள்!

 

Our Blog: http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

GRACE India Ministries, +91 9952427477, +91 9994599677, +91 99940 16570

To Unsubscribe click here! 

 

26 Jun 2013

27th June 2013 <<கலங்காதீர்கள் >>

GRACE & PEACE OF JESUS BE WITH YOU!
Having trouble viewing this email? READ HERE
please add wordoflordtamil@gmail.com to your email address book.
WORD of  LORD
DAILY DEVOTION FOR ETERNAL LIFE
<< GRACE INDIA MINISTRIES >>

27th June 2013 (வியாழன்)
இன்றைய வார்த்தை

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (யோவான் 14:1)

இன்றைய சங்கீதப் பகுதி

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். (42:11)

இன்றைய நீதிமொழி

ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். (10:15)
 
இன்றைய தியானம்

கலங்காதீர்கள்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆவிக்குரிய வாழ்வில் அனேக கலக்கங்கள் உண்டு! ஆனால் அவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவர் இயேசு நம்மோடு உண்டு! நாம் உண்மையாய் கர்த்தரின் வார்த்தைகளில் நிலைத்திருக்க முயற்சிக்கும்போது, உலகத்தாலும், சாத்தானாலும், சூழ்நிலைகளாலும் சிக்கவேண்டிவரும்! தடைகளைத்தாண்டவேண்டியிருக்கும்! தடைகளைத் தகர்க்கும் தகப்பன் நமக்குமுன்பாகச் செல்லுகிறார்!

ஆவிக்குரிய வறுமை கலக்கங்களைக் கொண்டுவரும்! கர்த்தரின் வார்த்தைகளைத் தியானித்து அவரில் நிலைத்திருந்தால் கலக்கமோ, கவலையோ நமக்கில்லையே!

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8:17)

ஆமென்!

இன்றைய ஜெபம்

எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! உமது நல்வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்! கலக்கங்களிலிருந்து விடுவிக்கிறவரே! எங்களைக் காத்துக்கொள்ளும்! விசுவாசத்தில் வர்த்திக்கப்பண்ணும்! எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!
 
உங்கள் கவனத்திற்கு

"கர்த்தரின் வார்த்தை"  (WORD of LORD)  தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

GRACE INDIA MINIStRIES

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

GRACE India Ministries | #175, 9th street, VGV Garden, | Kangeyam Road, | Tirupur | Tamil Nadu | India | 641606
To Unsubscribe click here! 



--
Posted By GRACE india ministries to WORD of LORD on 6/26/2013 12:38:00 am

25 Jun 2013

26th June 2013 << எது மகிமை? >>


GRACE & PEACE OF JESUS BE WITH YOU!
Having trouble viewing this email? READ HERE
please add wordoflordtamil@gmail.com to your email address book.
WORD of  LORD
DAILY DEVOTION FOR ETERNAL LIFE
<< GRACE INDIA MINISTRIES >>

25th June 2013 (புதன்கிழமை)
இன்றைய வார்த்தை

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது (என்றார்) (யோவான் 12:23)

இன்றைய சங்கீதப் பகுதி

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். (24:7)

இன்றைய நீதிமொழி

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். (22:4)
 
இன்றைய தியானம்

எது மகிமை?

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆண்டவராகிய இயேசு தான் மகிமைப்படப்போகிற வேளை எனக்குறிப்பிடுவது, தான் தேவனுடைய குமாரன் என எல்லோரும் அறிந்துகொள்ளும் நேரம் என சொல்லவில்லை! அல்லது தேவனைத் துதிக்கும் வேளை எனவும் சொல்லவில்லை! மாறாக தன் பிதாவின் சித்தத்தின்படி பாடனுபவித்து மரணத்தின் ஊடாக செல்லப்போவதையே சொன்னார்! இயேசு கிறிஸ்துவின் பார்வையில் பிதாவின் விருப்பத்தின்படி பாடுகளை அனுபவித்து அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வேளையே தனது உண்மையான மகிமை என நம்மை உணரவைக்கிறார். சில சமயம் நாம் படுகிற பாடுகள்கூட, அவைகளைக் கிறிஸ்துவின்பொருட்டு சகித்துக்கொண்டால், அது பிதாவுக்கு நாம் செலுத்தும் மகிமையே ஆகும்!

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8:17)

ஆமென்!

இன்றைய ஜெபம்

எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! உமது நல்வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்! நாங்கள் படுகிற சிலபாடுகள்கூட உமக்கு மகிமையாக இருப்பதை உணர்ந்து உம்மைத் துதிக்கிறோம்! எங்கள் வாழ்வு கிறிஸ்துவைப்போல உமது சித்தத்தை செய்வதாகவே இருக்கட்டும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!
 
உங்கள் கவனத்திற்கு

"கர்த்தரின் வார்த்தை"  (WORD of LORD)  தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

GRACE INDIA MINIStRIES

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

GRACE India Ministries | #175, 9th street, VGV Garden, | Kangeyam Road, | Tirupur | Tamil Nadu | India | 641606
To Unsubscribe click here! 

24 Jun 2013

Fwd: 25th June 2013 (Tuesday) WakeUp


Having trouble viewing this email? Click here
To ensure delivery of these Emails to your inbox, please add graceindiaministries@gmail.com to your email address book.
PROMISE  
"MY GRACE IS SUFFICIENT FOR THEE" (2 COR 12:9)
FOR PRAYER HELP
CONTACT:
+ 91 99524 27477
+91 98437 24467
WORD of LORD
daily devotion for eternal life!
< எழுந்திரு! >

இன்றைய வார்த்தை >

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; (நீதி 24:16)

இன்றைய சங்கீதப் பகுதி >

அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.(36:12)

இன்றைய நீதிமொழி >

சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? (6:9)

இன்றைய தியானம் >

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நீதிமான் விழுந்துபோவதற்கும் வாய்ப்புள்ளது! அது பின்மாற்றவாழ்வே! தேவனுக்கு பிரியமில்லாதவைகளின்மேல் பிரியப்படுதல் விழவைக்கும்! தான் விழ காரணம் தன் இச்சைகளே! ஏழு தரம் விழ நேர்ந்தாலும், கர்த்தரோ கிருபையாய் எழ வைக்கிறார்! தூசியை உதறிவிட்டு எழுவோம்! நாம் பிரகாசிக்கவேண்டியவர்கள்! விழுதல், எழுதல் என்ற இரண்டுக்கும் இடையில் உள்ள ஒன்று, கர்த்தர் நம் கரத்தைப் பிடித்துத் தூக்கிவிடுகிறார் என்பதுவே! வியாதிப்படுக்கை; தோல்விப் படுக்கை! வறுமை ஆகியன மாறட்டும்! கர்த்தரின் கரம் பிடித்து எழுந்து பிரகாசிப்போம்!

இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.(மாற்கு 9:27) ஆமென்!

இன்றைய ஜெபம் >

அன்பின் பரலோகப் பிதாவே!  உம் வார்த்தைகளுக்கு நன்றி! விழுந்து கிடந்த நிலையை மன்னியும்! எழுந்து பிரகாசிக்க உதவி செய்யும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரம்பிடித்து நடக்க உதவிசெய்யும்!

சர்வவல்லவர்  இயேசு கிறிஸ்துவின்  பெயரில் ஜெபிக்கிறோம்

எங்கள் நல்ல பிதாவே!  ஆமென்.

உங்கள் கவனத்திற்கு >

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு

கிருபையும் சமாதானமும் உண்டாவதாக!

"கர்த்தரின் வார்த்தை"  (WORD of LORD)  தின தியானத்தை குறைந்தபட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.

ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்!  ஆமென்!

Visit Our WebPage: http://graceword.wix.com/tamil

Visit Our Blog: http://graceindiaministries.blogspot.in/

E-Mail ID : graceindiaministries@gmail.com

Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/

கர்த்தரின் பணியில்

GRACE INDIA MINIStRIES

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
GRACE India Ministries | #175, 9th street, VGV Garden, | Kangeyam Road, | Tirupur | Tamil Nadu | India | 641606
Unsubscribe | Forward