அந்த ஸ்திரீ அவரை நோக்கி: "கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்" என்றாள். (யோவான் 4:25) சமாரியா ஸ்திரீ என்றவுடனே, அந்த பெண் எப்படிப்பட்டவர்? அவர் தொழில் என்ன? எந்த நிலையில் இருந்தார்? என்றெல்லாம் நமக்கு (சிந்தையில்) தோன்றும். (ஏனென்றால் நாம் மிகப் பரிசுத்தர்கள் அல்லவா?) ஆனால் அவர்களுக்குள் இருந்த ஆவிக்குரிய மேன்மைகளை உலகுக்கு எடுத்துக் காட்டவே ஆண்டவர் இயேசு அன்றைக்கு சமாரியாவுக்கு வந்து யாக்கோபின் கிணற்றினருகே அமர்ந்தார். (யோவான் 4:5 முதல் 42 வரை படித்து தியானிக்க!) உலகின் பார்வையில் சமாரியா ஸ்திரீ: அ) அவர் ஒரு அசுத்த வாழ்வு கொண்ட விபச்சாரி ஆ) 5 புருஷர்கள் இருந்தார்கள். இப்போது 6 வது ஆளுடன் வாழ்க்கை இ) தாழ்ந்த சமாரியப் பெண் ஈ) ஊராரால் ஒதுக்கப்பட்டவர் கர்த்தரின் பார்வையில் சமாரியா ஸ்திரீ: அ) கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர் ஆ) "ஆண்டவரே" என அழைத்து கிறிஸ்துவை மரியாதை செய்தவர் இ) முற்பிதாவாகிய யாக்கோபை நம்முடைய பிதா என அறிக்கை செய்தவர் ஈ) எனக்கு ஜீவத்தண்ணீரைத் தாரும் என கர்த்தர் இயேசுவை வேண்டிக்கொண்டவர் உ) ஆணாதிக்கத்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர் ஊ) சரியான தொழுகை பற்றி கேட்டறிந்தவர் எ) கிறிஸ்து எனப்படும் மேசியாவின் வருகை, அவரது போதனைகள் குறித்து அறிந்திருந்தவர் ஏ) கிறிஸ்துவை, மேசியாவாக, தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொண்டவர் ஐ) ஊரார் அனைவருக்கும் நடந்ததைச் சொல்லி, அனைவரையும் கர்த்தரிடம் அழைத்துவந்தவர். ஒ) சமாரியராகிய அந்த ஊரார் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க காரணமானவர்! இப்படி உலகம் பார்க்கிறவிதம் வேறு! ஆண்டவர் பார்க்கிற விதம் வேறு! நமது பார்வையும் கிறிஸ்துவின் பார்வையாக இருக்கட்டும்! கிறிஸ்துவின் சிந்தை நமக்கு உண்டாவதாக! எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். (லூக்கா 7:16) ஆமென்! |