நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.(உன் 5:2) சர்வ வல்லவருக்கு மகிமை! மணவாளனாகிய கர்த்தர் தன் மணவாட்டியை ‘’என் புறாவே! என் உத்தமியே!’’ என்று அழைக்கும் அன்பு வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். நம் தேவன் மனிதராகிய நம்மைப் படைத்துவிட்டு, ஏனோதானோ என விட்டுவிடவில்லை. நம்மை அவர் மிகவும் நேசிக்கிறார். அவருடைய நேசத்துக்குத் தகுந்த; உகந்த புறாக்களாக நாம் இருக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். இந்த பூமியில் புறாக்களை விரும்புகிறவர்கள் அதிகம். அவைகளின் அழகு, நிறம், பொறுமை, மற்றெதையும் துன்புறுத்தாத பண்பு என காரணங்கள் அதிகம். ஆனாலும் மணவாளன் விரும்புகிற ஆவிக்குரிய புறாக்களின் பண்புகள் இன்னும் மேன்மையானவைகள். ஓநாய்களுக்குள்ளே ஆடுகளைப்போல வாழவேண்டிய நாம் சில குணங்களால், அந்த ஓநாய்களையே மிஞ்சும் அளவுக்கு தோட்டத்தைக் கெடுக்கும் நரிகளாக (உன் 2:15) மாறிவிடுகிறோம். நமது சுய குணங்கள் நம்மை அப்படியே மணவாளனை விட்டு தூரப்படுத்திவிடும். மணவாளனுக்கு ஏற்ற புறாக்களாக மாறுவோம். யார் அந்த மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஏற்ற புறாக்கள்? அ) தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிவோர் (ஆதி 8:8-12) ஆ) கர்த்தரின் சமூகத்தில் சென்று இளைப்பறுவோர் (சங்கீ 55:10) இ) கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவுடன் தங்குவோர் (உன் 2:14) ஈ) உத்தமமான வாழ்வை உடையோர் (உன் 5:2) உ) பரிசுத்தமான கண்களை உடையோர் (உன் 5:12) ஊ) கர்த்தருடைய அடையாளங்களாய் இருப்போர் (மத் 3:16) எ) கபடற்றவராய் இருப்போர். (மத் 10:16) மேற்கண்ட குறிப்புகள் நம் வாழ்வில் காணப்படுமானால், மணவாளன் கிறிஸ்துவுக்கு ஏற்ற புறாக்கள் நாமே! மணவாட்டி எனும் நேசத்துக்கு பாத்திரவான்களாக இருக்கக் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக! புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.. (மத் 10:16) ஆமென்! |
0 comments:
Post a Comment