கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார். (எரேமியா 1:9,10) கர்த்தருக்கு மகிமை! கர்த்தர் தமது ஊழியர்களைத் தமக்கெனத் தெரிந்தெடுக்கிறார். ஊழியம் செய்ய வைக்கிறார். அதுமட்டுமல்லாது ஒருசில அதிகாரங்களையும் ஊழியர்களுக்குத் தருகிறார். ஊழியர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பூமியில் கட்டவும், மனிதரை கர்த்தரின் வார்த்தையில் நிலை நாட்டவும் உழைக்கிறார்கள். ஆனால் பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும் மறந்துபோகிறார்கள்! அதென்ன பிடுங்க, இடிக்க, அழிக்க, கவிழ்க்க? பிசாசின் பிடியில் சிக்கியிருக்கும் ஆத்துமாக்களை அவன் கையிலிருந்து பிடுங்க வேண்டும் – ஜெபத்தினால்! பூமியிலே கட்டப்பட்டிருக்கும் பிசாசின் ராஜ்ஜியத்தை இடிக்க வேண்டும் – விசுவாசத்தினால்! மனிதர் மேல், பிசாசு கொண்டுவரும் இச்சை போன்ற பாவச்செயல்களை அழிக்கவேண்டும் –துதியினால்! கர்த்தரின் சமூகத்தில் நடக்கும் மாறுபாடான செயல்களைக் கவிழ்க்கவேண்டும் –இயேசுகிறிஸ்து எனும் நாமத்தினால்! அல்லேலூயா! முன்பாக இவைகளைச் செய்யாமல், தேவ ராஜ்ஜியத்தைக் கட்டினாலும், எதைச் செய்தாலும், ஆத்துமாக்கள் மீண்டும், மீண்டும் பின்மாற்றத்தில் விழுவார்கள். நீதியைப் போதித்து அதில் நடக்கக் கற்றுதந்த ஆண்டவர், அநீதி எதுவென்று சொல்லி அதில் நடவாதிருக்கவும், கற்று தந்திருக்கிறார். முதலில் செம்மைப்படுத்தி பிறகு மேன்மைப் படுத்துவார்.ஜெபித்து, விசுவாசித்து, துதித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஊழியம் செய்வோம் சரியாக, வெற்றிகரமாக! அல்லேலூயா! அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.(எபே 2:22) ஆமென்! |
0 comments:
Post a Comment