"உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.(மத்தேயு 5:37) ஒரு சில நாட்டு வைத்தியசாலைகளில், குறிப்பிட்ட வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும்போது சில குறிப்புகளையும் சொல்லிக்கொடுப்பார்கள்! அதில் ஒன்று "இந்த மருந்தை உண்ணும்போது குரங்கை நினைக்காமல் உண்ணுங்கள்" என்பது! இப்படி சொல்லிக்கொடுத்தால், எங்கே குரங்கை நினைக்காமல் உண்ணமுடியும்? வைத்தியர்கள் இவ்வாறாகச் சொல்கிறார்கள், "இந்த மருந்தை உண்ணும்போது குரங்கை நினைக்க வேண்டும். ஆனால் எல்லா மனிதர்களுமே எதைச் செய்யச் சொல்கிறோமோ அதை செய்யமாட்டார்கள்! எதை செய்யக்கூடாதெனச் சொல்கிறோமோ அதைச் செய்வார்கள்! எனவேதான் அப்படி எதிர் மறையாகக்கூறி சரிசெய்கிறோம்" என்று! இதுதான் இன்றைய உலகம்! நம் வேத வார்த்தைகளைப் பொறுத்தவரை உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் ( Yes for Yes & No for No) தான் கூறவேண்டும் என நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார்! அவரிடத்தில் மாறுதலும் இல்லை! வேற்றுமையின் நிழலும் இல்லை! அதுதான் உண்மைக் கிறிஸ்தவனுக்கும் அடையாளம்! கர்த்தரின் வார்த்தைகளுக்கு எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், அப்படியே கீழ்ப்படிவதே நல்லது! அவருக்குக் கீழ்ப்படிவது என்பது, அவரிடம் அன்புகூர்வதாகும். கீழ்ப்படிந்தால், மேன்மை உண்டு! அல்லேலூயா! கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள் (பிலி 2: 15,16) ஆமென்! |
0 comments:
Post a Comment