<< நிழல் >>
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். (சங்கீதம் 36:7)
நாம் வாழ்கின்ற இந்த பூமியில் நிழல் தரும் மரங்கள் பல உண்டு! அவைகளின் நிழலிலே நன்மைகளும் உண்டு! தீமைகளும் உண்டு! வேப்பமரம் போன்ற ஒரு சில மரங்களின் நிழல் குளிர்ச்சியைத்தரும்; ஒரு சில மரங்களின் நிழலில் நின்றால்தான் தெரியும் அவைகளின் வாசனை நமக்கு ஒவ்வாது என்று! பெரிய வட்டவடிவிலே முள் மரங்களும் நிழல்தருகின்றன. ஆனால் அந்த நிழலை விரும்பிச் சென்றுவிட்டாலோ, காலில் முள்குத்தப்பட்டவர்களாய், இரத்தமும் வலியுமாய்த்தான் திரும்புவோம். இப்படித்தான் சில மனிதர்கள் உண்மையிலேயே கர்த்தரின் பிரதிபலிப்பாய் நன்மை செய்து நிழல் தருகின்றார்கள்! ஒரு சிலர் அடைக்கலம் தருவதுபோல நடித்து, கடைசியில் தங்கள் தடித்த வார்த்தைகளால், முள் போல நம்மைக் குத்திக் காயப்படுத்திவிடுவார்கள்!
ஆனால், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கோழி, தன் குஞ்சுகளை செட்டைகளுக்குள்ளே மூடிப் பாதுகாப்பதுபோல, தம் கிருபை எனும் நிழலிலே நம்மை அன்போடு சேர்த்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறார்! பிரியமானவர்களே, பொய் நிழல்களைக் கண்டு ஏமாந்தது போதும்! அடைக்கலம் தருவதுபோல நடித்து, அனைத்தையும் பிடுங்கி ஏமாற்றும் நிழல்கள் ஏராளம் இந்த பூமியில் உண்டு!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை எனும் நிழலில்,
நீங்கள் ஏங்கித் தவிக்கிற உண்மையான அன்பு உண்டு!
நீங்கள் விரும்புகிற நன்மைகள் உண்டு!
உங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு உண்டு!
வேண்டுகிற இளைப்பாறுதல் உண்டு!
அனேக போராட்டங்களின் மத்தியிலும், சமாதானமும், சந்தோஷமும் நிறைவாய் உண்டு!
-இவையனைத்தையும் அவர் சிலுவையிலே தம் சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் சிந்தி, நமக்காக வைத்திருக்கிறார்!நம்பிக்கையோடு அவரது செட்டைகளுக்குள் அடைக்கலமாய் ஒடிவந்தால், அன்போடு நம்மை அணைத்துக் கொள்ளுவார்!
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். (சங்கீ 121:5)
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். (ஏசா25:4)
ஆமென்!
ஜெபம் செய்வோமா?
அன்பின் பிதாவே! உமக்கு ஸ்தோத்திரம். எங்களுக்கு கிருபையின் நிழலாய் இருப்பதற்காக நன்றி! மற்ற ஏமாற்றும் நிழல்களிலிருந்து எங்களைத் தப்புவியும்! உமது செட்டைகளின் நிழலில் தஞ்சமடைகிறோம்! கிருபையுள்ள கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.
உங்கள் கவனத்திற்கு!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக! "கர்த்தரின் வார்த்தை" (WORD of LORD) தின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்.
24X7 ஜெப உதவிகளுக்குக் கீழே உள்ள எண்களில் தொடர்புகொள்ளுங்கள்! ஆமென்!
Visit our Website: http://graceind.wix.com/grace
To read old articles: wordtamil.blogspot.com
E-Mail ID : graceindiaministries@gmail.com
Join on Facebook : http://www.facebook.com/groups/wordoflord/
GRACE ministries(india)
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
0 comments:
Post a Comment