எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.(சங்கீதம் 3:6 ) பயப்படுகிறவர்கள் பரலோகம் செல்லப்போவதில்லை! வெளி 21:8 ன்படி பயப்படுதல் என்பது ஒரு பிரதான பாவமாகும். பயப்படுகிறவர்கள் கர்த்தர் தன்னோடு இருப்பதை மறந்து, அவரை மறுதலிக்கிறார்கள்! நான் உன்னோடு இருக்கிறேன் – என்கிற கர்த்தரின் வார்த்தைகளை மறக்கிறார்கள்! நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளவேண்டிய ஒன்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதைத்தான்! அவர் பரிசுத்த ஆவியானவராக நம்மோடும் நம்மைச் சுற்றிலும் இருந்து, நம்மை ஒரு குழந்தைபோலப் பாதுகாக்கிறார்! அவர் எப்படி நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்? நமக்கு மேலே இருக்கிறார் : தம்முடைய கிருபைகளைக் கொடுக்கும்படி! நமக்கு முன்பாக இருக்கிறார் : நம்மை வழி நடத்தும் மேய்ப்பனாக! நமக்குப் பின்பாக இருக்கிறார் : நம்மை அரவணைத்துப் பாதுகாக்கும் தகப்பனாக! நமக்குக் கீழே இருக்கிறார் : நம்மைத் தூக்கி சுமக்கும் தாயாக! இப்படி நம்மைச் சுற்றிலும் அவர் இருக்கிறபடியால், நாம் எந்த ஒரு சூழ்நிலைக்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை! தைரியமாய் இன்னும் அவரை கிட்டிச்சேருவோமா? அல்லேலூயா! "நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்"(சங்கீதம் 3:5) எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்"(சங்கீதம் 27:3) .ஆமென்! |
0 comments:
Post a Comment