நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.- (எபேசியர் 3:20,21). நமக்கு ஒரு தேவை இருக்கும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளில் இருக்கும்போது தேவைக்கு அதிகமாகவே கிடைத்தால் எப்படி இருக்கும்? எந்த ஒரு நேரத்திலும் நம்முடைய வேண்டுதல்களை தேவனுக்கு தெரியப்படுத்தினால் போதும் (பிலிப்பியர் 4:6,7). கர்த்தர் அனைத்தையும் பார்த்துக் கொள்ளுவார்.
கர்த்தர் நமக்கு எவைகளைக் மிகவும் அதிகமாய் கொடுக்கிறார்? அ) மகிழ்ச்சி அல்ல நித்திய மகிழ்ச்சி: கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். (ஏசாயா 35:10)
ஆ) மாட்சிமை அல்ல, நித்திய மாட்சிமை: நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.(ஏசாயா 60:15)
இ) பலன் அல்ல நிறைவான பலன்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.(ரூத் 2:12)
ஈ) நன்மை அல்ல பரிபூரண நன்மை: உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார் (உபா 28:11)
உ) கிருபை அல்ல பூரண கிருபை: கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. (அப்போஸ் 4:33)
ஊ) கிருபை அல்ல கிருபை மேல் கிருபை: அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். (யோவான் 1:16)
இவைகளைப் பெற்றுக்கொள்ள அவருடைய வார்த்தைகளின் மேல் விசுவாசம் இருந்தால் போதும். அனைத்தையும் பூரணமாக பெற்று கர்த்தரை மகிமைப் படுத்துவோம். நாமும் பூரணராய் அல்ல பரிபூரணமுள்ளவர்களாய் மாறுவோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல! மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலொ 2:10) ஆமென்! |
0 comments:
Post a Comment