இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; (மத்தேயு 15:8) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்! எப்படி கண்ணானது முழு உடலுக்கும் வெளிச்சமாக உள்ளதோ, அதேபோல நம் உதடுகள் நம் உடலுக்கு ஒரு வாசலாக இருக்கிறது. உதடுகளால் மட்டுமல்ல, முழு இருதயத்தாலும் நாம் கர்த்தரை கனம்பண்ண வேண்டும். உதடுகள், இருதயத்தின் கண்ணாடியாக இருந்து, இருதயத்திலுள்ளவைகளை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறது. நாம் நமது உதடுகளை எதற்கு பயன்படுத்துகிறோம்? புகைப்பதற்கா? வீண் வார்த்தைகளைப் பேசி பகைப்பதற்கா? உதடுகளோடு, இருதயமும் கர்த்தரையே கனம் பண்ணட்டும். நமக்கு உதடுகள் எதற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன? 1. மறுபாஷையாகிய கர்த்தரின் வார்த்தைகளைப் பேசுவதற்கு (1கொரி 14:21) 2. ஸ்தோத்திர பலியை தேவனுக்குச் செலுத்துவதற்கு (எபி 13:15) 3. செவ்வையான வார்த்தைகளைப் பேசுவதற்கு (எரே 17:16) 4. உதடுகளின் பலனாகிய சமாதானத்தைச் சொல்லுவதற்கு (ஏசா 57:19) 5. மேன்மையானவைகளைப் பேசுவதற்கு (நீதி 17:7) 6. கர்த்தரின் துதியைப் பிரஸ்தாபிக்க (சங்கீ 119:171) 7. பொருத்தனைகள் செய்வதற்கு (சங்கீ 66:14) 8. துதிப் பாடல்கள் பாடுவதற்கு (சங்கீ 71:23) நாம் நம்முடைய உதடுகளை திட்டுவதற்கு அல்ல; முறுமுறுப்பதற்கு அல்ல; சபிக்க அல்ல; புலம்ப அல்ல; மகிழ்வோடு கர்த்தரைத் துதிக்கப் பயன்படுத்தி, கர்த்தருக்கு ஏற்றவைகளாய் மாற்றுவோம், அப்போது நம் வாழ்வில் திருப்தியாவோம்! அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். (நீதி 18:20) ஆமென்! அன்பின் பரலோகப் பிதாவே, நீர் கொடுத்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. எங்கள் உதடுகள் உம்மைத் துதிப்பதாக. எங்களைத் திருப்தியாக்கப்போவதற்காக உமக்கு ஸ்தோத்திரம்! இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமென்! | |
0 comments:
Post a Comment