உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சகரியா 2:4) கர்த்தர் இயேசுவின் பெயரால் வாழ்த்துக்கள்! அன்புள்ள தாய்மார் தமது குழந்தைகளைக் கொஞ்சுவதை நாம் பார்த்திருப்போம். கண்ணே! என் கண்மணியே என்று! நமக்குத் தெரியுமோ தெரியாதோ, தேவனாகிய கர்த்தர் நம்மைத் தமது கண்மணியாகவே பார்க்கிறார். இந்த உலகில் இறைவன் இயேசு கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுகிற மனிதர் எவராயினும் அவர் கர்த்தரின் கண்மணியே! அது மாத்திரமல்ல, தமது பாவத்தைப் பார்க்க மாட்டாத சுத்தகண்களை நம்மீது வைத்திருக்கிறார்! அதாவது, அவருடைய கண்கள் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.(சங் 32:8) அவர் தமது வார்த்தைகளால் நமக்கு போதித்து, வழிகாட்டி, நம்மை நோக்கிப்பார்த்து ஆலோசனை சொல்லுகிற தெய்வம்! அல்லேலூயா! ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.(ஏசா 66:2) நாம் அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, தாழ்மையோடு, சுயத்தை வெறுத்தவர்களாய் வாழும்போது நமக்கு அனேக தொல்லைகள் இவ்வுலகில் உண்டு! ஆனாலும் கர்த்தர் நம்மைப் பார்த்து விடுவித்து மகிமைப்படுகிறவர்! அவர் நம்மை எல்லாவிதமான நெருக்கங்களில் இருந்தும் நிச்சயமாகவே விடுவிப்பார்! நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.(ஆதி 6:8) தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; (2நாளா 16:9) ஆமென்! |
0 comments:
Post a Comment