வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.(சங்கீதம் 119:9)
மாம்பழத்தில் பல வகைகள் உண்டு. அதனதன் காலத்தில் நேர்த்தியாகக் கிடைக்கும் மாம்பழங்களில் சிலர், வண்டு துளையிட்ட பழங்களை விரும்பி வாங்கி சுவைத்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட மாம்பழங்களில், அவை பூவாக இருக்கும்போதே வண்டுக்கள் அவைகளில் நுழைந்துவிடுகின்றன. அவை அங்கேயே தங்கியும் விடுகின்றன. காலப்போக்கில் பூ, காயாகி, பழுக்கிறது; சுவையாகவும் இருக்கிறது. ஆனால் பெருகவேண்டிய; மீண்டும் துளிர் விடவேண்டிய மாம்பழக் கொட்டை? அது அந்த வண்டால் நாசம் செய்யப்பட்டு, மீண்டும் பெருகமுடியாமல் அழிந்துவிடச் செய்கிறது.
வாலிபம் பூப்போன்றது. ஆம் அந்த வயதில்தான் வண்டு போன்ற இச்சைகளும், பாவங்களும் உட்புகுந்துவிடுகின்றன. வெளிப்புறம் சுவையானதாக; மகிழ்ச்சியாக இருந்தாலும், யாருக்கும் தெரியாமல், உட்புறம் கெட்டு அழுகி, பிற்பாடு அது பரலோக வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாதபடி செய்துவிடுகிறது.
கர்த்தர் இயேசுவுக்குள்; அவரது வார்த்தையில் உறுதியாக இருந்தால் ஒழிய அனைவரும் அழிவுக்கு தப்புவது கூடாத காரியம். உட்புறத்தை சுத்தமாக்க கர்த்தரின் பாதம் வருவோமா?
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.(சங்கீதம் 119:11)
ஆமென்!
|
0 comments:
Post a Comment