நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில்
திரும்பக்கடவோம். (புலம்பல் 3:40)
கம்பியூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க ஒரு சில
பாதுகாப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துவார்கள். அத்தகைய மென்பொருட்கள்,
கம்பியூட்டரின் அத்தனை நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வினாடியும் உற்று
கவனித்துக்கொண்டே இருக்கும். ஏதேனும் வைரஸ் உட்புகும்போது,
அதைச் சரியாக கவனித்து அழித்துவிடும். அத்தகைய
பாதுகாப்பு மென்பொருட்கள் இல்லாத கம்பியூட்டர்களில், வைரஸ்கள்
இல்லாத்தது போலிருந்தாலும், திடீரென ஒருநாள் கம்பியூட்டரின்
மொத்த செயல்பாட்டினையும் முடக்கிவிடும். பிறகு பெரிய செலவுதான்.
கிறிஸ்தவ வாழ்விலும் கூட, நாம் நம்மை ஒவ்வொரு
வினாடியும் கவனித்து, நடக்கவேண்டும். ஒவ்வொரு நாள் இரவிலும் நாம் நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நம்முடைய பேச்சிலாவது, சிந்தனையினாலாவது,
செயலினாலாவது கர்த்தருக்கு விரோதமாக நடந்திருக்கிறோமா அல்லது பிறருக்கு
தீங்கு விளைவித்திருக்கிறோமா என சிந்தித்து, கர்த்தரிடம்
/ பிறரிடம் மனம் வருந்தி, மன்னிப்பை பெற்றுக்கொள்வது
மிக அவசியம். அப்படியில்லாத கிறிஸ்தவ வாழ்வில், சில இச்சைகள் / பாவங்கள் மறைவாயிருந்து, காலப்போக்கில் நம் பரிசுத்த வாழ்வைச் சீர்குலைத்துவிடும். அந்த எச்சரிக்கை உணர்வை கர்த்தர் நமக்குத் தருவாராக!
தேவனே, என்னை ஆராய்ந்து,
என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச்
சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்; வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். (சங்கீதம்
139:23,24)
ஆமென்!
|
0 comments:
Post a Comment