நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.(சங்கீ 119:71) கர்த்தர் இயேசுவுக்கே மகிமை! ஆறுகளுக்கு குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டுகள் நிறையும்போது, தண்ணீர் அருவிபோல, திமு திமு வென கீழே விழுவதைப் பார்த்திருப்போம். அவ்வளவு தண்ணீர் மேலிருந்து கீழாக, மிக வேகமாக விழும்போது, அணையின் கீழ்பகுதி உடைந்து விடும் வாய்ப்பு அதிகம். எனவே தண்ணீர் விழும் கீழ்பகுதியில், காங்கிரீட்டால் ஆன ஒரு தொட்டியைக் கட்டி அதில் நிரந்தரமாக சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும்படி கட்டுவார்கள். அந்த சிறிதளவு தண்ணீரின் மேல்தான் அவ்வளவு தண்ணீரும் மேலிருந்து விழும். ஆனால் அணைக்கு பாதிப்பு இல்லை. அதிகத் தண்ணீரால் உண்டாகும் பாதிப்பை சிறிதளவு தண்ணீர் தடுக்கிறது! அதேபோலத்தான், நமக்கு பெரிய அளவில் துன்பங்கள் வராமல் காப்பாற்ற நம் கர்த்தர், அவ்வப்போது சில சிறு துன்பங்களை நம் வாழ்வில் இருக்கும்படி அனுமதிக்கிறார். பவுல் ஐயாவின் ‘’முள்’’ நீங்காதபோதும், அவருக்கு கர்த்தரின் கிருபையும், பெலனும் கிடைத்ததே! உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். (சங்கீ 22:24) கர்த்தர் நம் உபத்திரவங்களை மாற்றப்போவது நிச்சயம்! அல்லேலூயா! நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். (சங்கீ 119:67) நாம் கர்த்தருடைய வார்த்தைகளைக் காத்து நடக்கவிட்டால், உபத்திரவங்களின் வழியே நம்மை அவரது வழியில் திருப்புவார். எப்போதும் கர்த்தரின் வழியில் நடப்போருக்கு உபத்திரவங்கள் ஒரு பொருட்டே அல்ல! நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள் (அப்போஸ் 14:22) ஆமென்! |
0 comments:
Post a Comment